அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் சாதியத் கல்ச்சுரல் டிஸ்ட்ரிக்ட்டின் (Saadiyat Cultural District) மையத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டிடக்கலை அடையாளமான அபுதாபியின் சையத் நேஷனல் மியூசியம் (Zayed National Museum), டிசம்பர் 3, 2025 அன்று திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஸ்தாபக தந்தை ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் நினைவாக கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம், நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் நீடித்த மதிப்புகளின் சக்திவாய்ந்த அடையாளமாக விளங்குகிறது. அபுதாபி ஊடக அலுவலகத்தின் படி, திறப்பு விழா “ஷேக் சையத்தின் கலாச்சார பாரம்பரியம், கல்வி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அடையாளத்திற்கான வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பை மதிக்கிறது, இது கலாச்சாரம் மற்றும் கற்றலுக்கான உலகளாவிய மையமாக அபுதாபியின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.
டிக்கெட்டுகள் மற்றும் பார்வையாளர் விவரங்கள்
டிசம்பர் 3 முதல் வருகைகளுக்கான டிக்கெட்டுகள் இப்போது விற்பனையில் உள்ளன, இதன் விலை பெரியவர்களுக்கு 70 திர்ஹம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு, மூத்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், மாற்றுத்திறனாளி மக்கள் மற்றும் பணியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு நுழைவு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அமீரகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தள்ளுபடி கட்டணமான 35 திர்ஹம்ஸ்க்கு டிக்கெட்டுகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேர நேர அட்டவணையின்படி இடங்களை முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்டிடக்கலை அற்புதம்
உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் லார்ட் நார்மன் ஃபாஸ்டர் வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தின் குறிப்பிடத்தக்க கட்டமைப்பில் பருந்து இறக்கைகள் (falcon ) போன்ற வடிவிலான ஐந்து எஃகு கோபுரங்கள் உள்ளன, இது எமிராட்டி கலாச்சாரத்தில் பருந்து வளர்ப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. மேலும் நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பாரம்பரியம் அதன் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்திற்குள் என்ன இருக்கிறது?
ஆறு நிரந்தர காட்சியகங்கள் மற்றும் தற்காலிக கண்காட்சி இடம் ஆகியவற்றைக் கொண்ட இந்த அருங்காட்சியகம், 300,000 ஆண்டுகால மனித வரலாற்றின் ஆழமான பார்வையை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் முதல் நவீன சாதனைகள் வரை அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
- உலகின் பழமையான இயற்கை முத்துக்களில் ஒன்றான அபுதாபி முத்து
- நீல குர்ஆன், இஸ்லாமிய கலையின் தலைசிறந்த படைப்பு
- சையத் பல்கலைக்கழகம் மற்றும் NYU அபுதாபியுடன் இணைந்து கட்டப்பட்ட ஒரு பண்டைய மாகன் படகின் (Magan Boat) மறுஉருவாக்கம்
3 ديسمبر 2025 .. موعد افتتاح #متحف_زايد_الوطني بالمنطقة الثقافية في السعديات .. يجمع بين التحف الأثرية والقطع التاريخية والتجارب السمعية والبصرية والحسية .. ويحتفي بإرث الوالد المؤسس الشيخ زايد بن سلطان آل نهيان طيب الله ثراه #وام pic.twitter.com/ygRwndOrxl
— وكالة أنباء الإمارات (@wamnews) October 16, 2025
இந்த அருங்காட்சியகம் ஷேக் சையத்தின் பாரம்பரியத்தைத் தொடரும் என்று கூறப்படுகின்றது, வரலாற்று மீதான அவரது ஆர்வம் 1971 இல் அல் அய்னில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அருங்காட்சியகத்தை நிறுவ வழிவகுத்தது. இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பழங்காலக் கற்கால மற்றும் வெண்கலக் கால கலைப்பொருட்கள் உட்பட அதன் தொகுப்புகள் ஆரம்பகால எமிராட்டி சமூகங்களின் மீள்தன்மை மற்றும் புதுமைகளை எடுத்துக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது கல்வித் திட்டங்கள், சமூக நலன் மற்றும் எமிராட்டி அடையாளத்தில் வேரூன்றிய உலகளாவிய கலாச்சார உரையாடலை ஊக்குவிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel