ADVERTISEMENT

உலகின் முதல் 20 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் தரவரிசைப்படுத்தப்பட்ட அபுதாபி!!

Published: 1 Nov 2025, 5:19 AM |
Updated: 1 Nov 2025, 5:19 AM |
Posted By: Menaka

பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் அபுதாபி உண்மையிலேயே ஸ்மார்ட் நகரமாக இருப்பதன் அர்த்தத்தை மறுவரையறை செய்கிறது. இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கருப்பொருள் “Human-Centered Smart Cities” ஆகும், இது தொழில்நுட்பம் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில், அமீரகத்தின் தலைநகரமான அபுதாபி புதுமை என்பது AI மற்றும் தரவு பற்றியது மட்டுமல்ல, அதன் மக்களுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் நிலையான வாழ்க்கையை உருவாக்குவது பற்றியது என்பதை நிரூபித்து வருகிறது. AI-மூலம் இயங்கும் நகர மேலாண்மை மற்றும் தானியங்கி போக்குவரத்து முதல் மஸ்டார் சிட்டி போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த மையங்கள் வரை, அபுதாபி எதிர்கால நகரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான உலகளாவிய அளவுகோலை அமைத்து வருகிறது. இவ்வாறு அபுதாபியை உலக அரங்கில் தனித்து நிற்கச் செய்பவை என்னவென்று பின்வருமாறு பார்க்கலாம்.

பாதுகாப்பு மற்றும் புதுமைக்கான உலகளாவிய அங்கீகாரம்

நம்பியோ குறியீட்டால் (Numbeo Index) 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி மீண்டும் பெயரிடப்பட்டுள்ளது, இது தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தரவரிசை எமிரேட்டின் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த நிர்வாகத்தை பிரதிபலிக்கிறது.

ADVERTISEMENT

மேலும், IMD ஸ்மார்ட் சிட்டி குறியீட்டில் உலகின் முதல் 20 ஸ்மார்ட் நகரங்களில் அபுதாபி ஒரு இடத்தைப் பிடித்துள்ளது, டிஜிட்டல் மாற்றம், திறமையான நிர்வாகம் மற்றும் நிலையான நகர மேலாண்மை ஆகியவற்றில் அதன் சாதனைகளுக்காக தனித்து நிற்கிறது.

AI மற்றும் IoT ஸ்மார்ட் மேனேஜ்மென்ட்

பொது இடங்கள், பூங்காக்கள் மற்றும் அரசு கட்டிடங்களை நிர்வகிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதில் அபுதாபி முன்னணியில் உள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி பூங்காக்களைக் கண்காணிக்கவும், காற்றின் தரத்தை மதிப்பிடவும், மீறல்களைக் கண்டறியவும் சுற்றுச்சூழல் சென்சார்கள் பொருத்தப்பட்ட AI-மூலம் இயங்கும் ரோபோக்களை பயன்படுத்துகிறது. முன்னறிவிப்பு பகுப்பாய்வுகளும் ஆற்றல் மற்றும் நீர் பயன்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

மஸ்தார் சிட்டி: நிலைத்தன்மை (sustainabilitiy) மற்றும் புதுமைகளுக்கான மையம்

மஸ்தார் சிட்டி சுத்தமான ஆற்றல் (clean energy) மற்றும் பொருளாதாரக் (circular economy) கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிகவும் நிலையான நகர்ப்புற சமூகங்களில் ஒன்றாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

மேலும் ஸ்மார்ட் சிட்டிஸ் லேப் மற்றும் அபுதாபி இன்னோவேஷன் ஆக்சிலரேட்டர்ஸ் போன்ற முயற்சிகள் மூலம், நகர்ப்புற தீர்வுகளை உருவாக்க குடியிருப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களை ஈடுபடுத்துகின்றன.

ஸ்மார்ட் மற்றும் தானியங்கி இயக்கம்

அபுதாபி எமிரேட் யாஸ் ஐலேண்ட் மற்றும் சாதியத் ஐலேண்ட் ஆகியவற்றில் முதல் கட்ட திட்டங்களுடன் தானியங்கி போக்குவரத்து அமைப்புகளை முன்னேற்றி வருகிறது. இந்த AI-மூலம் இயக்கப்படும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களைக் கண்டறிந்து, தடைகளைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். இவை எமிரேட்டின் சுத்தமான மற்றும் திறமையான இயக்கம் என்ற நோக்கத்தை ஆதரிக்கின்றன.

TAMM: அனைவருக்கும் டிஜிட்டல் சேவைகள்

TAMM தளம் அபுதாபியின் டிஜிட்டல் தலைமையைக் காட்டுகிறது. இதில் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்கள் உரிமம் பெறுவது முதல் வீட்டுவசதி வரை நூற்றுக்கணக்கான அரசு சேவைகளை இந்த ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் அணுக அனுமதிக்கிறது. இந்த டிஜிட்டல் மாற்றம் காகித பயன்பாட்டை 90%க்கும் அதிகமாகக் குறைத்து, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

AI பயன்பாடு

அபுதாபியின் ஸ்மார்ட் சிட்டி உத்தி 2030, மனித மகிழ்ச்சியையும் சமூக வாழ்க்கையையும் மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, AI-மூலம் இயங்கும் அமைப்புகள் இப்போது போக்குவரத்தை நிர்வகிக்கின்றன, நெரிசலைக் குறைக்கின்றன. இந்த முயற்சிகள் நிலையான எரிசக்தி உத்தியை நிறைவு செய்கின்றன, மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை ஊக்குவிக்கின்றன மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துகின்றன. மேலும் 2050 ஆம் ஆண்டிற்கான எமிரேட்டின் காலநிலை நடுநிலை இலக்குகளை ஆதரிக்கின்றன.

அபுதாபியை போலவே, துபாய் எமிரேட்டும் அதன் ஸ்மார்ட் துபாய், காகிதமில்லா நகரம் மற்றும் தானியங்கி போக்குவரத்து உத்தி 2030 போன்றவற்றின் மூலம் ஸ்மார்ட் நகரங்களுக்கான தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel