இந்தியாவின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒரு மாபெரும் நடவடிக்கையாக, ஏப்ரல் 2026 முதல் அதன் உலகளாவிய பாடத்திட்டத்தை வெளியிட உள்ளதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், புதிய பாடத்திட்டம் அமீரகம் மற்றும் பிற நாடுகளில் உள்ள அனைத்து CBSE-இணைந்த பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
திங்களன்று துபாயில் தொடங்கிய முதல் சர்வதேச மற்றும் 31வது ஆண்டு சஹோதயா பள்ளி வளாகங்கள் மாநாட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. “Rooted in Wisdom, Rising with Vision – Reimagining Education through NEP 2020″ என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்வில் இந்தியா மற்றும் வளைகுடாவைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட CBSE பள்ளித் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்றுகூடியதாகக் கூறப்படுகிறது.
மேலும், KHDA, ADEK மற்றும் SPEA பிரதிநிதித்துவப்படுத்தும் ஓமான், பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூத்த கல்வி ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் CBSE தலைவர்கள், இந்திய அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் துபாயில் உள்ள இந்திய தூதரகத் தூதர் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் வரவிருக்கும் உலகளாவிய பாடத்திட்டம் மற்றும் இந்தியாவிற்கும் GCC பிராந்தியத்திற்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்வதேச CBSE வாரியத்தைத் தொடங்குவதற்கான திட்டங்களை முதன்முதலில் வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு, செவ்வாயன்று பேசிய CBSE இன் பிராந்திய அலுவலகமும் துபாயில் உள்ள சிறப்பு மையத்தின் இயக்குநருமான டாக்டர் ராம் சங்கர், உலகளாவிய பாடத்திட்டம் தற்போது வரைவு நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து கூறுகையில் “பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்பு நாங்கள் அதிக விவாதங்களை நடத்துவோம், இது அடுத்த கல்வியாண்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது,” என்று டாக்டர் சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது, அமீரகத்தில் 106 CBSE பள்ளிகள் உள்ளன என்றும், இது இந்தியாவிற்கு வெளியே மிகப்பெரிய CBSE வலையமைப்பாக இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.
GCC ஒழுங்குமுறை அதிகாரிகளிடமிருந்து வலுவான ஆதரவு
வளைகுடா முழுவதும் உள்ள கல்வி ஒழுங்குமுறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை வரவேற்றதாகவும், பாடத்திட்ட சூழல்மயமாக்கல், ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் உலகளாவிய சான்றிதழ் அங்கீகாரம் ஆகியவற்றில் ஒத்துழைக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், மலிவு கட்டணத்தை உறுதி செய்யும் அதே வேளையில் கல்வி சிறப்பைப் பேணுவதில் CBSE இன் உறுதிப்பாட்டை பாராட்டிய அவர்கள், பிராந்தியத்தில் உள்ள CBSE பள்ளிகளின் நிலையான தரம் மற்றும் செயல்திறனையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
“இது CBSE-க்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் உலகளவில் கல்வித் தரங்களை ஒத்திசைப்பதற்கான ஒரு நேர்மறையான படியாகும்” என்று வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் CBSE-ன் உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கல்வி வாரியம் அதன் கல்வி தடத்தை உலகளவில் விரிவுபடுத்த தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel