ADVERTISEMENT

துபாயில் முதல் முறையாக 8 நாள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அறிவிப்பு!!

Published: 24 Nov 2025, 5:38 PM |
Updated: 24 Nov 2025, 5:38 PM |
Posted By: Menaka

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். துபாய் டவுன்டவுனில் புத்தாண்டு கொண்டாட்டத்தை காண்பதற்காகவே உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது வழக்கம். அதிலும் கடந்த வருடங்களில் 1.7 மில்லியன் பார்வையாளர்களை துபாய் டவுன்டவுன் கண்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் முதல் முறையாக, டவுன்டவுன் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் புத்தாண்டு துவங்கும் நள்ளிரவு மட்டுமின்றி ஒரு வாரத்திற்கு கொண்டாட்டங்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி புர்ஜ் கலீஃபாவில் தொடங்கி ஜனவரி 7 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெறும் என்று Emaar அறிவித்துள்ளது.

பரந்த டவுன்டவுன் துபாயில் நடத்தப்படும் இந்த கொண்டாட்டங்கள் இலவசமாகவும் அனைவருக்கும் திறந்திருக்கும் என்றாலும், வானவேடிக்கை, ஒளி மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளின் பிரத்யேக காட்சிகளை வழங்கும் புர்ஜ் பார்க்கில் முன் வரிசை அணுகலுக்கு பிரீமியம் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டிக்கெட்டுகள் (இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது):

  • பெரியவர்கள்: 997.5 திர்ஹம்ஸ் (VAT சேர்க்கப்பட்டுள்ளது)
  • குழந்தைகள் (5–12): 577.5 திர்ஹம்ஸ்
  • 5 வயதுக்குட்பட்டவர்கள்: இலவசம் (முன்பதிவு செய்யப்பட்ட அணுகல் பேட்ஜ் தேவை)

அனைத்து டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் முன்கூட்டியே வாங்க வேண்டும் என்பதை ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு கொண்டாட்டம், டவுன்டவுன் துபாயை ஒரு பிரம்மாண்டமான மேடையாக மாற்றும் என்று கூறப்படுகிறது. ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட தகவல்களின் படி, புர்ஜ் கலீஃபா லேக், துபாய் மால் நடைபாதை மற்றும் கட்டிடத்தின் முழு முகப்பு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் பார்வையாளர்கள் இப்பகுதியில் எங்கு இருந்தும் கொண்டாட்டங்களை பார்க்கலாம்,” என்று எமார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எட்டு நாள் நிகழ்ச்சியில் நேரடி நிகழ்ச்சிகள், வான்வழி நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை அடங்கும். இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட முந்தைய எந்த புத்தாண்டு நிகழ்வையும் விட மிக அதிகமாக இந்த நிகழ்வு இருக்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் விவரித்துள்ளனர்.

மேலும், உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், நகரத்தின் கலாச்சாரம் மற்றும் உணர்வைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமான அணிவகுப்பு டவுன்டவுன் துபாயில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. முழு நிகழ்ச்சிகளின் வரிசையும் விரைவில் வெளியிடப்படும் என்று எமார் கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel