ஐக்கிய அரபு அமீரகத்தின் 54வது தேசிய தினத்தைக் கொண்டாடும் விதமாக, தொலைத்தொடர்பு நிறுவனமான du அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 54GB இலவச 5G டேட்டாவை வழங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்களின் விசுவாசத்திற்கு நன்றி தெரிவிக்கவும், தடையற்ற, அதிவேக இணைப்புடன் மக்கள் விடுமுறையை அனுபவிக்கவும் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின் படி, அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் du பயனர்களுக்கும் இலவச டேட்டா கிடைக்கும், இதனால் அவர்கள் தேசிய கொண்டாட்டங்கள் முழுவதும் அன்புக்குரியவர்களுடன் இணையத்தில் தொடர்பில் இருக்க முடியும்.
du செயலி அல்லது sms மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக சலுகையை செயல்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், தேசிய தின விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே டேட்டா செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தின விடுமுறையில் ஐக்கிய அரபு அமீரக சமூகத்தை ஆதரிப்பதற்கும் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சலுகையை செயல்படுத்துவது மற்றும் செல்லுபடியாகும் காலம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு du மொபைல் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகுமாறு வலியுறுத்தப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel