உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ஏர் ஷோ 2025 இன்று துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் (DWC) ஆற்றல், வண்ணம் மற்றும் வலுவான விமானப் போக்குவரத்து உற்சாகத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள மாபெரும் கண்காட்சியில் இந்தாண்டு பதிப்பில்1,500க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் இந்த ஆண்டு பதிப்பு இதுவரை இல்லாத மிகப்பெரியதாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். துபாய் காவல்துறையினரின் ஆற்றல்மிக்க அணிவகுப்புடன் தொடங்கிய ஏர்ஷோ பல பில்லியன் டாலர் விமான ஆர்டர்கள் மற்றும் அடுத்த தலைமுறை ஏர் டாக்சிகள், ட்ரோன்கள் மற்றும் நிலையான விமான தீர்வுகளை வெளியிடுவது என பல்வேறு நிகழ்வுகளின் வரிசைகளுடன் நடைபெறவிருக்கிறது. கண்காட்சி நிகழ்வு குறித்த ஒரு கண்ணோட்டம் இங்கே:
ஒரு பிரமாண்டமான வரவேற்பு: துபாய் காவல்துறை அணிவகுப்பு
துபாய் காவல்துறையின் பிரபலமான அணிவகுப்பு இசைக்குழு கண்காட்சியின் முதல் நாளை சக்திவாய்ந்த இசை அணிவகுப்புடன் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், வெளிப்புற காட்சிப் பகுதி முழுவதும் ஆரவாரத்துடன் விருந்தினர்களை பிரம்மாண்டமாக வரவேற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
துபாய் வேர்ல்டு சென்ட்ரலில் திரண்டிருந்த குடும்பங்கள், விமான ஆர்வலர்கள், தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் திறந்தவெளி மைதானத்தில், ஓடுபாதையில் வரிசையாக நிற்கும் நேர்த்தியான விமானங்களை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த தனியார் ஜெட் விமானங்கள், இராணுவ விமானங்கள், சரக்கு விமானங்கள் மற்றும் எதிர்கால மாதிரிகள் ஆகியவற்றின் காட்சி பார்வையாளர்களிடையே பரபரப்பான உரையாடல்களை உருவாக்கியுள்ளது.
துபாய் ஏர்ஷோ 2025 ன் புதிய சிறப்பம்சம்
முதன்முறையாக இரவு அனுபவங்கள்
- ‘Party on the Runway’ (ஸ்கைடைவ் துபாய்): இன்று, இரவு 8–11 மணி
- ‘ Airshow After Dark’ (ஏர்ஷோ தளம்): நாளை, மாலை 5:30–9 மணி
இந்த இரவு நேர நிகழ்வுகளில் நேரடி பொழுதுபோக்கு, ட்ரோன் ஷோக்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட கண்காட்சி சூழல் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
19வது பதிப்பில் புதிய சேர்க்கைகள்
- ‘Aersopace Executive Club’: விமானப் போக்குவரத்துத் தலைவர்களுக்கான பிரத்யேக நெட்வொர்க்கிங் இடம்.
- ‘Sustainability focus’: பசுமையான விமானப் போக்குவரத்து கண்டுபிடிப்புகளைக் காட்டும் மண்டலம்.
- ‘eVTOL Flying Display’: நகர்ப்புற இயக்கத்தின் எதிர்காலத்தை நிரூபிக்கும் பறக்கும் டாக்சிகள் மற்றும் கார்கள்.
- ‘Inspiration Zone’: அகாடமி – இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு மேடை; நல்வாழ்வு மண்டலம் – சென்சாரி பாட்கள், மனநல உரையாடல் மற்றும் சுகாதார சோதனைகள்.
- ‘Runway Run’: துபாய் விமானக் கண்காட்சி ஓடுபாதையில் 5K உடற்பயிற்சி சவால்.
- ‘Youth Circles’: எமிராட்டி மற்றும் உலகளாவிய இளைஞர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அதிகாரம் அளிக்கும் ஒரு புதிய அம்சம்.
- ‘Dubai Airshow Mascot’: சூரிய சக்தியில் இயங்கும் இறக்கைகள் மற்றும் UAE-கொடியுடன் டெயில் கொண்ட ஒரு அழகான ஃபால்கன் சின்னம்.
- ட்ரோன் லைட் ஷோ: இருட்டிற்குப் பிறகு ஏர்ஷோவின் போது வானத்தை ஒளிரச் செய்கிறது.
- ‘SkyBites’: உலகம் முழுவதிலுமிருந்து உணவு வகைகளை வழங்கும் ஒரு புத்தம் புதிய உணவு அனுபவம்
ஷேக் முகமது வருகை
துபாய் ஆட்சியாளரும் துணைத் தலைவரும் பிரதமரும் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், புதிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஆராய விமான கண்காட்சிக்கு வருகை தந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னேற்றத்தையும், விமான கண்காட்சி தொடர்ந்து பெறும் உலகளாவிய அங்கீகாரத்தையும் பாராட்டியதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தாமதங்கள்
இதற்கிடையில், இன்று காலியா அல் மக்தூம் விமான நிலைய சாலையில் பல வாகன விபத்து ஏற்பட்டதால், துபாய் தெற்கு நோக்கிச் செல்லும் பார்வையாளர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. போக்குவரத்து மந்தநிலை இருந்தபோதிலும், கூட்டம் தொடர்ந்து வந்ததால் உற்சாகம் அதிகமாக இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு செல்வது எப்படி?
பார்வையாளர்களுக்கான அணுகலை எளிதாக்குவதற்காக துபாயின் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்துள்ளனர்.
டாக்ஸி தள்ளுபடிகள்
- துபாய் ஏர்ஷோவுக்கான பயணங்களுக்கு இ-ஹெயில் டாக்சிகளில் 20% தள்ளுபடி
- அதிகபட்ச தள்ளுபடி: 15 திர்ஹம்ஸ் (நான்கு பயணங்கள் வரை)
இவ்வாறு புதுமை, பொழுதுபோக்கு மற்றும் உலகளாவிய பங்கேற்பை மையமாகக் கொண்டு, துபாய் ஏர்ஷோ 2025 இதுவரை மறக்கமுடியாத பதிப்புகளில் ஒன்றை வழங்குவதாக உறுதியளிக்கிறது. நிகழ்வு தொடர்ந்து புரட்சிகரமான தொழில்நுட்பங்களையும் கண்கவர் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதால் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel