ADVERTISEMENT

விரைவில் துவங்கும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்.. 4 இலட்சம் திர்ஹம்ஸ் வரை வெல்லும் வாய்ப்பு..

Published: 23 Nov 2025, 7:24 PM |
Updated: 23 Nov 2025, 7:24 PM |
Posted By: Menaka

துபாய் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) இந்தாண்டு பதிப்பு வருகின்ற டிசம்பர் 5, 2025 முதல் ஜனவரி 11, 2026 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் சலுகைகள், பொழுதுபோக்கு, உணவு அனுபவங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளின் வரிசையால் நிரப்பும் இந்த வருடாந்திர நிகழ்வு இப்போது அதன் 31வது பதிப்பில் அடியெடுத்து வைக்கிறது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு விழா 38 நாட்கள் செயல்பாடுகளை வழங்கும் என்றும், இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கச்சேரிகள், வெளிப்புற சந்தைகள், வானவேடிக்கை காட்சிகள், குடும்ப நட்பு நிகழ்ச்சிகள், ராஃபிள்கள் மற்றும் ப்ரொனோஷன்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்டுவரும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வின் ஒரு பகுதியாக, 200 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய Nissan மற்றும் 100,000 திர்ஹம்ஸ் ரொக்கமாக வெல்லும் வாய்ப்பை வழங்கக்கூடிய தினசரி டிராக்களில் நுழைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இறுதி நாளில் 400,000 திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசுடன் விழா முடிவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, பங்கேற்பாளர்கள் வாராந்திர ராஃபிள்கள் மூலம் 2.6 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள தங்கத்தை வெல்லலாம், இது DSF ஐ உலகின் மிகப்பெரிய பரிசு வழங்கும் ஷாப்பிங் விழாக்களில் ஒன்றாக மாற்றுகிறது.

2025–2026 க்கான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மால்கள், விற்பனை மையங்கள் மற்றும் நகரம் முழுவதும் உள்ள வெளிப்புற இடங்களுக்கு ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அனைத்து வயதினருக்கும் நம்ப முடியாத தள்ளுபடிகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் அற்புதமான அனுபவங்களை வழங்குகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel