ADVERTISEMENT

துபாய்: 6 மாதங்களில் 12.2 பில்லியன் திர்ஹம்ஸ்.. இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச லாபத்தை பதிவு செய்த எமிரேட்ஸ் குழுமம்!!

Published: 6 Nov 2025, 4:55 PM |
Updated: 6 Nov 2025, 5:11 PM |
Posted By: Menaka

எமிரேட்ஸ் குழுமம், 2025–26 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 12.2 பில்லியன் திர்ஹம் வரிக்கு முந்தைய லாபத்தை ஈட்டி, அதன் வலுவான அரையாண்டு முடிவுகளைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17% அதிகமாகும். இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக சாதனையான அரையாண்டு லாபத்தை பதிவு செய்கிறது. வலுவான உலகளாவிய பயண தேவை மற்றும் எமிரேட்ஸின் பிரீமியம் தயாரிப்புகளுக்கான நிலையான வாடிக்கையாளர் விருப்பம் போன்றவை இந்த சாதனை லாபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல், குழுமம் 10.6 பில்லியன் திர்ஹம்ஸ் வரிக்குப் பிந்தைய லாபத்தை ஈட்டியதாக அறிவித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 13% அதிகமாகும், அதே நேரத்தில் வருவாய் 4% அதிகரித்து 75.4 பில்லியன் திர்ஹம் ஆக உள்ளது. மேலும், அதன் ரொக்க இருப்பு 56 பில்லியன் திர்ஹம்ஸை எட்டியது, இது அதன் பொருளாதார மீள்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் செயல்திறன்

ADVERTISEMENT

எமிரேட்ஸ் விமான நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக 11.4 பில்லியன் திர்ஹம்ஸை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 17% உயர்வாகும், அதேபோல் வருவாய் 6% அதிகரித்து 65.6 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயைத் தளமாகக் கொண்டு செயல்படும் இந்த விமான நிறுவனம் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 27.8 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது, இது ஆண்டுக்கு ஆண்டு 4% அதிகரிப்பாகும், மேலும், சரக்கு அளவுகள் 4% அதிகரித்து 1.25 மில்லியன் டன்கள் ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய சரக்கு தேவை பலவீனமாக இருந்ததால் வருவாய் 6% குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, எமிரேட்ஸ் அதன் 23 விமானங்களில் கேபின்களை மேம்படுத்தி 61 வழித்தடங்களில் பிரீமியம் எகானமி சேவையை அறிமுகப்படுத்தியது. கூடுதலாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் முதல் வகுப்பு மற்றும் பிளாட்டினம் ஸ்கைவர்ட்ஸ் உறுப்பினர்களுக்கான தனியார் செக்-இன் வசதியான “எமிரேட்ஸ் ஃபர்ஸ்ட்” ஐ இது அறிமுகப்படுத்தியது.

இது குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் பேசுகையில், “குழு மீண்டும் ஒரு சிறந்த செயல்திறனை வழங்கியுள்ளது, கடந்த ஆண்டின் முடிவுகளை விஞ்சி 2025–26 ஆம் ஆண்டின் முதல் பாதியில் புதிய சாதனை லாபத்தை அடைந்துள்ளது” என்று அறிவித்துள்ளார்.

dnata வலுவான வளர்ச்சி

dnata அதன் மிக உயர்ந்த அரை ஆண்டு வருவாயான 11.7 பில்லியன் திர்ஹம்ஸை எட்டியது, இது கடந்த ஆண்டை விட 13% அதிகமாகும், மேலும், வரிக்கு முந்தைய லாபம் 17% அதிகரித்து 843 மில்லியன் திர்ஹம்ஸை எட்டியுள்ளது.

இவை தவிர, விமான நிலைய சேவைகள் 5.5 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாயை ஈட்டியது, விமான இயக்கங்கள் 451,000 ஆக உயர்ந்ததால் 15% அதிகரித்துள்ளது. மேலும், கேட்டரிங் மற்றும் சில்லறை விற்பனை 4.1 பில்லியன் திர்ஹம்ஸ் ஈட்டியது, 11% அதிகரித்துள்ளது. அதேபோல், பயண சேவைகள் 2 பில்லியன் திர்ஹம்ஸ் ஈட்டியதாக அறிக்கைகள் கூறுகின்றன.

புதிய A350 விமான டெலிவரிகள் மற்றும் dnataவின் விரிவாக்கப்பட்ட வசதிகள் மூலம், எமிரேட்ஸ் குழுமம் அதன் அடுத்த வளர்ச்சிக் கட்டத்தை வலிமையான நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறது. புதிய வழித்தடங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறனை ஆதரிக்க இரு வணிகங்களும் தொடர்ந்து பணியமர்த்தல் முறையை மேற்கொண்டதால் அதன் பணியாளர்கள் எண்ணிக்கை 3% அதிகரித்து 124,927 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel