ADVERTISEMENT

சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை: தனிப்பட்ட தகராறில் நடந்த விபரீதம்..!!

Published: 5 Nov 2025, 8:51 AM |
Updated: 5 Nov 2025, 8:51 AM |
Posted By: Menaka

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் மலைப்பாங்கான பகுதியில் சட்டவிரோத பொருட்களை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நாட்டின் உள்துறை அமைச்சகம் திங்களன்று உறுதிப்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

சவுதி எல்லை பாதுகாப்பு சட்டங்களை மீறியதற்காக (Saudi Border Security Law) ஜித்தா மாகாண காவல்துறையினரால் இரண்டு எத்தியோப்பிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோதலின் போது, ​​சந்தேக நபர்களில் ஒருவர் இந்தியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவதில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, இருவரும் சவுதி பொது வழக்குரைஞரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, மேலும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT