2025 நிறைவடையும் தருவாயை நெருங்கிக் கொண்டிருப்பதால், அமீரகக் குடியிருப்பாளர்கள் பலரும் 2026ஆம் ஆண்டில் புனித ரமலான் மாதம் எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அடுத்த வருட ரமலான் சீக்கிரமாக நெருங்கி வருகிறது.. ஆம், ஆரம்பகால வானியல் கணிப்புகளின்படி, இஸ்லாமியர்களின் புனித மாதம் அடுத்த வருட பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரமலான் 2026 எப்போது தொடங்குகிறது?
துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் (IACAD) தரவுகளின் அடிப்படையில், ரமலான் பிப்ரவரி 17 மற்றும் 19, 2026க்கு இடையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வியாழக்கிழமை, பிப்ரவரி 19 அன்று தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் போல, பிறை நிலவைப் பார்த்த பிறகுதான் சரியான தொடக்க தேதி உறுதிப்படுத்தப்படும்.
லைலத் அல்-கத்ர் (சக்திவாய்ந்த இரவு)
இஸ்லாத்தின் மிகவும் புனிதமான இரவுகளில் ஒன்றான ‘Laylat al-Qadr’, மார்ச் 17, 2026 செவ்வாய்க்கிழமை இரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனித குர்ஆனின் வெளிப்பாட்டைக் குறிக்கும் வகையில், முஸ்லிம்கள் இந்த இரவை தொழுகையிலும் பிரார்த்தனையிலும் செலவிடுவார்கள்.
ரமலான் எப்போது முடிவடையும்?
ரமலான் மாதம் மார்ச் 19, 2026 வியாழக்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இது பிறை பார்ப்பதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும்.
ஈத் அல் ஃபித்ர் 2026
ரமலானின் முடிவைக் குறிப்பது ஈத் அல் பித்ர் பண்டிகை நாளாகும், இது நோன்பின் நிறைவைக் குறிக்கும் ஒரு கொண்டாட்டமாகும். அந்த வகையில், ஈத் அல் பித்ர் 2026 வெள்ளிக்கிழமை, மார்ச் 20 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ஆண்டின் முதல் நீண்ட வார விடுமுறையை வழங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகம் வழக்கமாக ஈத் பண்டிகைக்கு மூன்று பொது விடுமுறை நாட்களை வழங்குகிறது, இது பிறை பார்ப்பதைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம்.
ரமலான் மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள்
பள்ளிகளில் வசந்த கால விடுமுறைகள் ரமலான் மற்றும் ஈத்தின் கடைசி நாட்களுடன் ஒத்துப்போகின்றன.
- தனியார் பள்ளிகள் (செப்டம்பர் தொடக்கம்): மார்ச் 16 முதல் மார்ச் 30 வரை விடுமுறை வழங்கும்
- MOE பாடத்திட்டப் பள்ளிகள்: மார்ச் 16 முதல் மார்ச் 29 வரை விடுமுறை வழங்கும்
இந்த விடுமுறைகள் ஈத் விடுமுறையுடன் ஒத்துப்போவதால் குடும்பங்கள் நீண்ட பண்டிகை விடுமுறையை ஒன்றாக அனுபவிக்க முடியும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேதிகளும் வானியல் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு மற்றும் அமீரக அரசாங்கத்தால் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel