ADVERTISEMENT

தேசிய தின விடுமுறை: துபாயில் பார்க்கிங், மெட்ரோ, டிராம், பஸ் உள்ளிட்ட சேவைகளின் இயக்க நேரங்களை வெளியிட்ட RTA!!

Published: 28 Nov 2025, 2:35 PM |
Updated: 28 Nov 2025, 2:35 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தேசிய தின விடுமுறைகளுக்கான சேவை நேரங்களை வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையில் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள், மெட்ரோ, டிராம், பேருந்துகள், பார்க்கிங், கடல் போக்குவரத்து மற்றும் வாகன சோதனை மையங்கள் ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்

தேசிய விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் எமிரேட்டில் உள்ள அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் மூடப்படும் என்று RTA அறிவித்துள்ளது. இருப்பினும், உம் ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் த்வார் மற்றும் RTA தலைமை அலுவலகம் ஆகியவற்றில் உள்ள ஸ்மார்ட் மையங்கள் டிஜிட்டல் சேவைகளுக்காக 24/7 திறந்திருக்கும் என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

சேவை வழங்குநர் மையங்கள்

சேவை வழங்குநர் மையங்களைப் பொறுத்தவரை, டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மூடப்படும். அதையடுத்து, டிசம்பர் 3 அன்று வழக்கமான வேலை நேரம் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் மெட்ரோ நேரங்கள்

சனிக்கிழமை, 29 நவம்பர் 2025

  • அதிகாலை 5:00 – நள்ளிரவு 1:00 (அடுத்த நாள்)

ஞாயிறு, 30 நவம்பர் 2025

  • காலை 8:00 – நள்ளிரவு 1:00 (அடுத்த நாள்)

திங்கள் & செவ்வாய், 1–2 டிசம்பர் 2025

  • அதிகாலை 5:00 – நள்ளிரவு 1:00 (அடுத்த நாள்)

துபாய் டிராம் நேரங்கள்

சனிக்கிழமை, 29 நவம்பர் 2025

  • காலை 6:00 – நள்ளிரவு 1:00 (அடுத்த நாள்)

ஞாயிறு, 30 நவம்பர் 2025

  • காலை 9:00 – நள்ளிரவு 1:00 (அடுத்த நாள்)

திங்கள் & செவ்வாய், 1–2 டிசம்பர் 2025

  • காலை 6:00 – நள்ளிரவு 1:00 மணி (அடுத்த நாள்)

பொது பேருந்துகள்

டிசம்பர் 1–2 தேதிகளில் ஈத் அல் எதிஹாத் விடுமுறையின் போது புதுப்பிக்கப்பட்ட பேருந்து அட்டவணைகளுக்கு S’hail செயலியை சரிபார்க்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது பார்க்கிங்

ஈத் அல் எதிஹாத் விடுமுறையின் போது எமிரேட்டில் உள்ள அனைத்து பொது பார்க்கிங் இடங்களையும் ஓட்டுநர்கள் இலவசமாக அணுகலாம். ஆனால், மல்ட்டி-ஸ்டோரி பார்க்கிங் மற்றும் அல் கைல் கேட் N-365 ஆகியவற்றில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், புதன், டிசம்பர் 3 முதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வார விடுமுறையில் குடியிருப்பாளர்களுக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்கும் துபாய் முழுவதும் விடுமுறை கொண்டாட்டங்களை ஆதரிப்பதற்கும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel