ADVERTISEMENT

நாட்டின் முதல் தீம் பார்க்கை திறக்கும் சவுதி அரேபியா..: டிசம்பர் முதல் செயல்படும் என அறிவிப்பு!!

Published: 26 Nov 2025, 2:07 PM |
Updated: 26 Nov 2025, 2:07 PM |
Posted By: Menaka

சவூதி அரேபியா தனது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகின்றது. அவற்றில் ஒன்றாக, நாட்டின் முதல் தீம் பார்க்கை வருகின்ற டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கவுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கிதியா சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தீம் பார்க்கானது, டிசம்பர் 31, 2025 அன்று முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது. இது வட அமெரிக்காவிற்கு வெளியே உள்ள முதல் சிக்ஸ் ஃபிளாக்ஸ் (six flags) பூங்கா என்பதுடன், இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் அரபு பிராந்தியத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஈர்ப்புகளில் ஒன்றாகவும் மாறவுள்ளது.

சிக்ஸ் ஃபிளாக்ஸ் கிதியா சிட்டி, சவூதி அரேபியாவின் விஷன் 2030 இன் கீழ் அதன் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும் அதன் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரியாத்திலிருந்து சுமார் 40 நிமிட தூரத்தில் உள்ள அழகிய துவைக் மலைகளில் (Tuwaiq Mountains) அமைந்துள்ள இந்த பிரமாண்டமான திட்டம், கிதியா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் “பவர் ஆஃப் ப்ளே” உத்தியை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

சவுதி அரேபியா 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 150 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்க இலக்கு வைத்துள்ளது, மேலும் கிதியா சிட்டி உலகத் தரம் வாய்ந்த ஈர்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை வசதிகளை வழங்குவதன் மூலம் அந்த இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தீம் பார்க்கின் சிறப்பம்சங்கள்

இந்த தீம் பார்க் 28 சவாரிகளைக் கொண்டிருக்கும், இதில் சில உலக சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

ADVERTISEMENT
  • ‘Falcons Flight‘ – உலகின் மிக உயரமான, வேகமான மற்றும் நீளமான ரோலர் கோஸ்டராக திட்டமிடப்பட்டுள்ளது.
  • ‘Iron Rattler‘ – உலகின் மிக உயரமான டில்ட் கோஸ்டராக (tilt coaster) விளம்பரப்படுத்தப்படுகிறது.
  • ‘Spitfire‘ – உலகின் மிக உயரமான தலைகீழ் கோஸ்டராக (inverted coaster) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பயங்கரமான த்ரில் ரைடுகளுடன், இந்தப் பூங்கா அனைத்து வயதினருக்கும் ஏற்ற இடமாக அமையும் என கூறப்படுகின்றது.

உலகத் தரம் வாய்ந்த உணவு & ஷாப்பிங்

கூடுதலாக, சர்வதேச உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் பிரத்தியேகமான சிக்ஸ் ஃபிளாக்ஸ் பொருட்களை வழங்கும் சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை பார்வையாளர்கள் இங்கே எதிர்பார்க்கலாம். மேலும் இது முடிக்கப்பட்டவுடன், கிதியா சிட்டி பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கும்.

இந்த வளர்ச்சி சுற்றுலா மற்றும் நீண்டகால பொருளாதார பன்முகத்தன்மை இரண்டையும் இயக்கும் அடுத்த தலைமுறை நகரமாக கருதப்படுகிறது. மேலும், இந்த தீம் பார்க்கானது தினமும் மாலை 4 மணிக்கு பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலைகள்

  • பெரியவர்கள்: 325 சவுதி ரியால்
  • குழந்தைகள்: 275 சவுதி ரியால்
  • 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு: இலவசம்
  • வரம்பற்ற GoFast பாஸ்: சவாரிகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்
  • மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், பூங்காவில் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது.

இலவச ஷட்டில் சேவை

நியமிக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளிலிருந்தும், பிற்பகல் 3 மணிக்கு சேவைகள் தொடங்கும். ஜித்தா மெட்ரோ நிலையத்திலிருந்தும் பார்வையாளர்களை இணைக்கும் இலவச ஷட்டில் சேவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஷட்டில் சேவைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகக்கூடியவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel