இந்திய சினிமாவின் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான், மற்றொரு அசாதாரண மைல்கல்லை எட்டியுள்ளார். ஆம், துபாயில் கட்டப்படவிருக்கும் ஒரு வானளாவிய கட்டிடத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஷாருக்கான் என பெயரிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயின் நீண்டகால ரசிகரும் அதன் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய தூதர்களில் ஒருவருமான ஷாருக்கான், இப்போது துபாயில் உள்ள ஒரு முழு வானளாவிய கட்டிடத்திற்கும் தனது பெயரை வைத்த முதல் நடிகராகவும் மாறியுள்ளார்.
‘Dubai Tourism’ பிரச்சாரங்களில் நடிப்பது முதல் துபாயை தனது இரண்டாவது தாயகம் என்று அழைப்பது வரை பல ஆண்டுகளாக எமிரேட் மீதான தனது அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தியதற்காக அறியப்பட்ட பாலிவுட் ஜாம்பவானான ஷாருக், இப்போது துபாயுடனான தனது பிணைப்பை அதன் வானளாவிய கட்டிடத்தில் பதித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான நிகழ்வில், ‘Shahrukhz by Danube’ என்று பெயரிடப்பட்ட அற்புதமான திட்டம் வெளியிடப்பட்டது. அதில் அமீரகத்தில் இயங்கி வரும் பிரபல தனூப் குழுமம் துபாயின் ஷேக் சையத் சாலையில் 55 மாடி கமெர்ஷியல் கட்டிடத்தை கட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கின் நீண்டகால தோழியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஃபரா கான் நடத்திய ஒரு பிரகாசமான விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தனூப் குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், ஷாருக் ரியல் எஸ்டேட் துறையில் நுழைவதைக் குறிக்கிறது எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இந்தக் கட்டிடத்திற்கு பெயரிடுவது, அமீரகத்துடனான அவரது நீடித்த தொடர்பையும், துபாய் அவர் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும் ஒரு சக்திவாய்ந்த ஒப்புதலாகக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் ‘Shahrukhz by Danube’ கட்டிடம், தொழில்முனைவோர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களுக்கு சேவை செய்யும் என்றும், விலைகள் 1.7 மில்லியன் திர்ஹம்களில் தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நுழைவாயிலில் ஷாருக்கானின் ஐகானிக் போஸ் ஆன கைகளை விரித்த தோரணையில் சிலை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் 2029 இல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடையாளம், ஷாருக் கான் துபாயில் ‘ஜன்னத்’ என்ற ஆடம்பரமான வில்லாவை பாம் ஜுமேராவில் வாங்கியது முதல் துபாயின் சர்வதேச பிராண்டிங் பிரச்சாரங்களின் முகமாக இருப்பது வரையிலான துபாயுடனான அவரது ஆழமான, தசாப்த கால உறவையும் பிரதிபலிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel