ADVERTISEMENT

விமான பயணத்தை எளிதாக்க ஷார்ஜா ஏர்போர்ட்டின் புதிய ‘ஹோம் செக்-இன்’ சேவை அறிமுகம்..!!

Published: 10 Nov 2025, 8:19 PM |
Updated: 10 Nov 2025, 8:21 PM |
Posted By: Menaka

ஷார்ஜா விமான நிலையம் பயணிகளின் பயணத்தை எளிதாக்க புதிய ‘Home check-in’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயணிகள் தங்கள் வீடுகள், ஹோட்டல்கள் அல்லது பணியிடங்களிலிருந்து தங்கள் செக்-இன் செயல்முறையை முடிக்க அனுமதிக்கிறது, இது அவர்களின் விமானப் பயணத்தை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சேவையின் மூலம், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்ததும், அவர்கள் செக்-இன் வரிசைகளைத் தவிர்த்து நேரடியாக பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுக்குச் செல்லலாம். போர்டிங் பாஸ்களை வழங்குவது முதல் பயணிகளின் வீட்டு வாசலில் இருந்து லக்கேஜ்களை சேகரிப்பது வரை என அனைத்தையும் ஷார்ஜா விமான நிலையக் குழு கையாளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவையை எவ்வாறு முன்பதிவு செய்வது?

ADVERTISEMENT

பயணிகள் ஹோம் செக்-இன் சேவையை பின்வரும் 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்:

  • www.sharjahairport.ae
  • 800745424 ஐ அழைக்கவும்
  • ‘SHJ Home Check-In’ மொபைல் ஆப்ஸ்

ஷார்ஜா ஏர்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பயணிகள் விமானம் புறப்படுவதற்கு குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட வேண்டும், இது பரபரப்பான பயண காலங்களில் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பும் குடும்பங்கள் மற்றும் வணிக பயணிகளுக்கு சேவையை சிறந்ததாக மாற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சேவைக் கட்டணம்

  • கோரல் பேக்கேஜ் (Coral Package): 1–2 பைகளுக்கு 145 திர்ஹம்ஸ் (1–2 bags)
  • சில்வர் பேக்கேஜ்: 165 திர்ஹம்ஸ் (3–4 பைகள், 3–4 bags)
  • கோல்டு பேக்கேஜ்: 185 திர்ஹம்ஸ் (6 பைகள் வரை, upto 6 bags)

கூடுதலாக, விமான நிறுவனத்தின் பேக்கேஜ் கொள்கையின்படி, ஒவ்வொரு கூடுதல் பைக்கும் 20 திர்ஹம்ஸ் செலவாகும். அத்துடன் இந்த சேவை தற்போது அதன் முதல் கட்டத்தில் உள்ளது என்றும், ஷார்ஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த சேவை கிடைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், துபாய் மற்றும் அபுதாபியிலிருந்து புறப்படும் பயணிகளும் ஹோம் செக்-இன் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்:

துபாயில், எமிரேட்ஸ், ஃப்ளைதுபாய், சவுதியா, மற்றும் குவைத் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் dnata மூலம் இயக்கப்படும் Dubz மூலம் வீட்டிலேயே செக்-இன் சேவையை வழங்குகின்றன.
அபுதாபியில், எதிஹாத் ஏர்வேஸ் இதே போன்ற சேவையை வழங்குகிறது, இதனால் பயணிகள் வரிசைகளைத் தவிர்த்து மன அழுத்தமின்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel