ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றான ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டத்திற்கு அனைத்து எமிரேட்டுகளும் தயாராகி வருகிறது. டிசம்பர் 2, 1971 அன்று ஏழு எமிரேட்கள் ஒன்றிணைந்து 54 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாடு குறிக்கும் நிலையில், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப நட்பு நடவடிக்கைகள் நிறைந்த ஒரு நீண்ட வார இறுதியை அனுபவிக்கின்றனர்.
இந்த கொண்டாட்டங்களின் போது ஏழு எமிரேட்டுகளிலும் நவம்பர் மாத இறுதியிலிருந்து டிசம்பர் ஆரம்பம் வரை, ஐக்கிய அரபு அமீரகக் கொடியின் வண்ணங்கள், கண்கவர் வாணவேடிக்கைகள் மற்றும் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் தேசிய பெருமையை மதிக்கும் துடிப்பான கொண்டாட்டங்களுடன் முழு தேசமும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
எமிரேட்ஸ் முழுவதும் அதிகாரப்பூர்வ விழாவை நேரலையில் காணலாம்
ஈத் அல் எதிஹாத் ஏற்பாட்டுக் குழு இந்த ஆண்டு நாடு தழுவிய கொண்டாட்டங்களை “United” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கியுள்ளது. டிசம்பர் 2 அன்று ஏழு எமிரேட்களிலும் உள்ள இடங்களில் ஒளிபரப்பப்படும் அதிகாரப்பூர்வ விழாவை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.
துபாயில், பொதுமக்கள் பார்வையிடும் இடங்களில் அல் கவானீஜ், குளோபல் வில்லேஜ் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் ஆகியவை அடங்கும். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொண்டாட்ட வழிகாட்டிகள், செயல்பாட்டு நிகழ்வுகள் மற்றும் யூடியூப்பில் ஈத் அல் எதிஹாத் பிளேலிஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அணிவகுப்புகள்
ஒவ்வொரு எமிரேட்டும் கலாச்சாரம், இசை மற்றும் சமூக உணர்வை வெளிப்படுத்தும் வண்ணமயமான அணிவகுப்புகளை நடத்துகின்றன.
துபாய்
ஈத் அல் எதிஹாத் 54 அணிவகுப்பு டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிட்டி வாக்கில் தொடங்குகிறது. இந்த அணிவகுப்பில் துபாய் காவல்துறை அணிவகுப்பு இசைக்குழு, குதிரைப்படை போலீசார், அகாடமி மாணவர்கள் மற்றும் சமூகக் குழுக்கள் பங்கேற்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமா
டிசம்பர் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் கடல்சார் அணிவகுப்பு
அல் கவாசிம் கார்னிச் கொண்டாட்டம் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை
நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள்
இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி பொழுதுபோக்குகளின் தொடர் வரிசை அடங்கும்.
துபாய்
டிசம்பர் 2 ஆம் தேதி துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் உள்ள ஃபெஸ்டிவல் பேவில் பாடகி-நடிகை பால்கீஸ் நேரடி இசை நிகழ்ச்சியைப் பார்க்கலாம். மேலும், சிட்டி வாக்கில் டிசம்பர் 1 ஆம் தேதி லெபனான் பாடகி டயானா ஹடாட் மற்றும் மறுநாள் ஷம்மா ஹம்தான் இரண்டு இசை நிகழ்ச்சிகளை இலவசமாகக் காணலாம். கூடுதலாக, டிசம்பர் 1–3 வரை சிட்டி வாக்கில் தினசரி கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கோர்பக்கன்
நவம்பர் 29 ஆம் தேதி ஹுசைன் அல் ஜாஸ்மி மற்றும் ஃபவுத் அப்தெல்வஹாத் ஆகியோர் இடம்பெறும் சிறப்பு இசைக் கச்சேரி நடைபெறும்.
வானவேடிக்கைகள் மற்றும் ட்ரோன் நிகழ்ச்சிகளை எங்கு பார்ப்பது?
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின வாணவேடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
துபாய் – டிசம்பர் 2
- துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் – இரவு 8 மணி
- ஹத்தா – இரவு 8 மணி
- சூக் அல் சீஃப் – இரவு 9 மணி
- ப்ளூவாட்டர்ஸ் – இரவு 9 மணி
- தி பீச், ஜேபிஆர் – இரவு 9 மணி
- குளோபல் வில்லேஜ் – டிசம்பர் 1–3 முதல் இரவு 9 மணி வரை வாணவேடிக்கை & ட்ரோன் நிகழ்ச்சிகள்
அபுதாபி
அபுதாபியில், யாஸ் பே வாட்டர்ஃபிரண்ட் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் 2 நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் டிசம்பர் 1–3 வரை தேசிய தின சிறப்பு வாணவேடிக்கை, லேசர் காட்சி, ட்ரோன் காட்சி, பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் குடும்ப செயல்பாடுகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள்
ஷார்ஜா
நவம்பர் 19 முதல் டிசம்பர் 2 வரை அல் சியூ குடும்ப பூங்கா, க்ஷிஷா பூங்கா மற்றும் ஷார்ஜா தேசிய பூங்கா ஆகியவை இளைஞர் குழுக்கள் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தினசரி நடவடிக்கைகளை நடத்துகின்றன. அதேபோல், அல் லய்யா கேனல் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை கொண்டாட்டங்களை நடத்தும்
துபாய்
சிட்டி சென்டர் மிர்டிஃப்: நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரை ஒர்க் ஷாப், நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அனுபவிக்கலாம்.
அபுதாபி
பவாபத் அல்-ஷார்க் மாலில் நடைபெறும் அல் அய்ன், அல் கானா உள்ளிட்ட தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளலாம். மேலும், அயலா நடனங்கள், மருதாணி, மட்பாண்டங்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் ஃபால்கன் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றையும் அனுபவிக்கலாம்.
ஷாப்பிங் சலுகைகள்: 5-நாள் சூப்பர் சேல்
துபாயின் பிரபலமான 3-நாள் சூப்பர் சேல் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா விற்பனை நிகழ்வில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை, 500க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 90% வரை தள்ளுபடி சலுகைகளை அனுபவிக்கலாம். இந்த விற்பனை நவம்பர் 28 ஆம் தேதி துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் துபாயின் முதல் 24 மணி நேர விற்பனை உடன் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel