ADVERTISEMENT

100 தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 50 மில்லியன் திர்ஹம்ஸ் வழங்கி கௌரவித்த அமீரக அரசாங்கம்!!

Published: 13 Nov 2025, 5:36 PM |
Updated: 13 Nov 2025, 5:36 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை, நவம்பர் 13) அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவது ‘Emirates Labour Market Award (ELMA)’ விழாவில் சுமார் 100 சிறந்த தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) ஏற்பாடு செய்த இந்த வருடாந்திர விருது வழங்கும் விழா, அமீரக தொழிலாளர் சந்தையில் சிறந்த நடைமுறைகள், புதுமை மற்றும் சிறப்பை அங்கீகரிப்பதற்காக நடத்தப்படுகின்றது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு பதிப்பில் 98 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், கடந்த ஆண்டு 84 பேர் வெற்றி பெற்றனர், மேலும் மொத்த பரிசுத் தொகை 37 மில்லியன் திர்ஹம் ஆக இருந்ததுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மொத்த பரிசுத் தொகை 50 மில்லியன் திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது.

விருது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, தனிநபர் பிரிவில், முதல் இடத்தைப் பிடித்தவர்கள் 100,000 திர்ஹம்ஸ் பெற்றனர், அதே நேரத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர்கள் முறையே 75,000 திர்ஹம் மற்றும் 50,000 திர்ஹம் பெற்றனர் எனக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

அதேபோல், நிறுவனங்களுக்கான பிரிவில், வெற்றியாளர்கள் MoHRE இலிருந்து குறிப்பிடத்தக்க வகைப்பாடு சலுகைகளைப் பெற்றுள்ளனர். முதல் இடத்தைப் பிடித்த நிறுவனங்கள் சிறந்த பிரிவில் வகைப்படுத்தப்பட்டதுடன் அமைச்சகத்தின் சேவைகளில் 1.2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள தள்ளுபடிகள் மூலம் பயனடையும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த நிறுவனங்கள் முறையே 1 மில்லியன் திர்ஹம்ஸ் மற்றும் 500,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள நன்மைகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்தாண்டு ‘Labour Accommodations’ என்ற பிரிவில் ஒரு புதிய துணைப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது தேசிய மற்றும் ஈத் விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு நிலையான மற்றும் பொழுதுபோக்கு முயற்சிகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த ஊக்குவிக்க கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இது குறித்து கூறுகையில் “இத்தகைய முயற்சிகள் உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன, சமூக மதிப்புகளை வலுப்படுத்துகின்றன மற்றும் பணியாளர்களிடையே சொந்தம் என்ற உணர்வை வளர்க்கின்றன” என்று MoHRE குறிப்பிட்டுள்ளது.

எமிரேட்ஸ் தொழிலாளர் சந்தை விருது ஆண்டுதோறும் துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் ஆதரவின் கீழ் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel