ADVERTISEMENT

அமீரக தேசிய தினம்: யாருக்கெல்லாம் 5 நாட்கள் பொது விடுமுறை..??

Published: 18 Nov 2025, 9:17 AM |
Updated: 18 Nov 2025, 9:17 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் 54வது தேசிய தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நபர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்கப்பெறவுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு 4 நாட்கள் பொது விடுமுறை கிடைக்கும்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளை நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக அறிவித்தது. இருந்தபோதிலும் ஷார்ஜா எமிரேட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஷார்ஜா மனிதவளத் துறை வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகள் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் டிசம்பர் 3 புதன்கிழமை அன்று மீண்டும் பணிகளைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஷார்ஜாவின் நிலையான வெள்ளி முதல் ஞாயிறு வரையிலான 3 வார விடுமுறைகளையும் சேர்த்து பொதுத்துறை ஊழியர்கள் மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறையை அனுபவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, ஷார்ஜாவின் கல்வி அமைச்சகம் அனைத்து தனியார் மற்றும் பொதுப் பள்ளிகளும் அதே தேதிகளில் மூடப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஷார்ஜாவில் உள்ள மாணவர்கள் ஐந்து நாள் விடுமுறையைப் பெறுவார்கள், அதே நேரத்தில் மற்ற எமிரேட்களில் உள்ள மாணவர்கள் நான்கு நாட்கள் விடுமுறையைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு விடுமுறை சரிசெய்தல் ஜனவரி 1, 2025 அன்று அமல்படுத்தப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தைத் தொடர்ந்து வருகிறது, இது சில பொது விடுமுறை நாட்களை வாரத்தின் தொடக்கத்திற்கோ அல்லது இறுதிக்கோ மாற்ற அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த விதி ஈத் விடுமுறை நாட்களுக்குப் பொருந்தாது மற்றும் அமைச்சரவை முடிவின் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும்.

ADVERTISEMENT

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைந்த விடுமுறைக் கொள்கை, பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஆண்டு முழுவதும் சம எண்ணிக்கையிலான விடுமுறை நாட்களைப் பெறுவதை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel