ADVERTISEMENT

UAE: அபராதம் மற்றும் கட்டணங்களை மாத தவணையில் இனி ‘Tabby’ யிலும் செலுத்தலாம்.!!வெளியான அறிவிப்பு.!!

Published: 25 Nov 2025, 7:07 PM |
Updated: 25 Nov 2025, 7:09 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைச்சகம் (MoF) குடியிருப்பாளர்களுக்கான ஒரு புதிய சேவையை அறிவித்துள்ளது. இது ‘Tabby’ எனப்படும் பேமண்ட் செயலி வழியாக குடியிருப்பாளர்கள் மத்திய அரசாங்க கட்டணங்கள் மற்றும் அபராதங்களை மாதாந்திர தவணைகளில் செலுத்த அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, Tabby முதலில் கட்டணத்தின் முழுத் தொகையையும் அந்தந்த அரசு நிறுவனத்திற்கு செலுத்தும் என்றும், அதன் பிறகு அந்தத் தொகையை வாடிக்கையாளரால் முன் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்து விருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது ‘Buy Now, Pay Later’ மாதிரியை பின்பற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Tabby உடன் குறைந்த கமிஷன் விகிதம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேவை கட்டணங்கள் மற்றும் அபராதங்களைச் செலுத்த இந்த சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர் தேர்வுசெய்தால் மட்டுமே கமிஷனை செலுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான டிஜிட்டல் கட்டண விருப்பங்களை விரிவுபடுத்தவும், நிதி உள்ளடக்கத்தை ஆதரிக்கவும் மற்றும் அரசு சேவைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து MoF உதவி துணைச் செயலாளர் சயீத் ரஷீத் அல் யதீம் அவர்கள் கூறுகையில், கூட்டாண்மை அனைத்து கூட்டாட்சி நிறுவனங்களையும் உள்ளடக்கியது என்றும் மேலும் நெகிழ்வான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அதேபோல், வாடிக்கையாளர்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்குவதும், அரசாங்க சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதும் தங்கள் நோக்கம் என்று Tabby-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஹோசம் அரப் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel