ADVERTISEMENT

அமீரகவாசிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 போக்குவரத்து மாற்றங்கள்!!

Published: 16 Dec 2025, 4:43 PM |
Updated: 16 Dec 2025, 4:45 PM |
Posted By: Menaka

புதிய இலக்குகளுடன் உலகம் புதிய ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் நிலையில், அமீரகக் குடியிருப்பாளர்கள் தங்கள் தினசரி பயணங்களை மாற்றியமைக்கும் சமீபத்திய போக்குவரத்து விதிகள், போக்குவரத்து மேம்படுத்தல்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு மேம்பாடுகளை தெரிந்திருப்பது அவசையமாகும்.

ADVERTISEMENT

2025 இல் பெரிய மாற்றங்களைக் கண்ட பிறகு மாறக்கூடிய சாலிக் கட்டணங்கள், புதிய பார்க்கிங் கட்டணம் மற்றும் அதிக நெரிசல் உட்பட புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு விரிவாக்கங்கள் இருக்கின்றன.

இந்த புதிய நடவடிக்கைகள் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி குடும்பங்கள், டெலிவரி ரைடர்கள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் எனப் பலருக்கும் பயன்படும். நான்காவது ஃபெடரல் நெடுஞ்சாலை மற்றும் துபாய் முழுவதும் பல மாடி பார்க்கிங் கட்டிடங்கள் போன்ற நீண்ட கால திட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் முன்னெடுத்து வருகிறது. அதன்படி 10 முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விபரங்களை கீழே காணலாம்.

ADVERTISEMENT

1. அபுதாபியில் திருத்தப்பட்ட ‘Darb’ டோல் நேரம்

செப்டம்பர் 1, 2025 முதல், அபுதாபி மாலை Darb டோல் நேரத்தை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை (முன்பு மாலை 5-7 மணி வரை) விரிவுபடுத்தியுள்ளது.
காலையில் கட்டணம் வசூலிக்கக்கூடிய நேரங்கள் மாறாமல் இருக்கும், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் இலவசம். தினசரி மற்றும் மாதாந்திர டோல் வரம்புகள் அகற்றப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் போன்ற குழுக்களுக்கு தற்போதுள்ள விதிவிலக்குகள் தொடர்கின்றன.

2. புதிய மாறுபட்ட வேக வரம்பு அமைப்பு

அக்டோபர் 27 முதல், ஷேக் சையத் பின் சுல்தான் சாலையில் அபுதாபி வாகன ஓட்டிகள் புதிய மாறக்கூடிய வேக அமைப்பை பின்பற்றுகின்றனர். நெரிசல், சம்பவங்கள், பணிப் பகுதிகள் அல்லது வானிலை போன்ற நிகழ்நேர சாலை நிலைமைகளின் அடிப்படையில் வேக வரம்புகளை சரிசெய்ய எலெக்ட்ரானிக் அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த அமைப்பு மென்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து இயக்கத்திற்கான மத்திய கட்டுப்பாட்டு நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

3. துபாயில் விரைவு பாதைகளில் டெலிவரி ரைடர்களுக்கு தடை

புதிய கட்டுப்பாடு நவம்பர் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, டெலிவரி பைக்குகள் இப்போது அதிவேக பாதைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளில் பின்வருவன அடங்கும்:

  • 5 வழிச் சாலைகளில் இடதுபுறம் உள்ள இரண்டு பாதைகளுக்கு அணுகல் இல்லை
  • 3- அல்லது 4-வழிச் சாலைகளில் இடதுபுறப் பாதைக்கு அணுகல் இல்லை
  • இருவழிச் சாலைகளில் இரு வழிகளையும் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்.

4. ஷார்ஜாவில் பிரத்யேக பாதைகள்

ஷார்ஜாவில் கடந்த நவம்பர் 1 முதல் மோட்டார் பைக்குகள், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கான பிரத்யேக பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கனரக வாகனங்கள் வலதுபுறம் உள்ள பாதையைப் பயன்படுத்த வேண்டும், அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள்கள் வேகமான பாதைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் கேமராக்கள் மற்றும் ரேடார்கள் இதனை 24/7 என முழுநேரமும் கண்காணிக்கின்றன.

5. அஜ்மானில் ஸ்மார்ட் ஸ்பீட் லிமிட்டர்கள்

டாக்சிகள் மற்றும் லிமோசின்களில் ஸ்மார்ட் வேகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய முதல் எமிரேட் என்ற பெருமையை அஜ்மான் பெற்றுள்ளது. நிகழ்நேர இருப்பிடம் மற்றும் சாலை வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாகனத்தின் வேகத்தை கணினி தானாகவே சரிசெய்கிறது. இது வேகவரம்பு விதிமீறல்களைக் குறைத்து சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

6. முக்கிய அபுதாபி சாலைகளில் டிரக் தடை

பின்வரும் இரண்டு சாலைகளில் டிசம்பர் 1, 2025 முதல், டிரக்குகள் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளன:

  • ஷேக் மக்தூம் பின் ரஷித் சாலை (E11)
  • அல் ரஹா கடற்கரை சாலை (E10)

அவை E75 மற்றும் அல் அட்லாவிற்கு திருப்பி விடப்படுகின்றன. கூடுதலாக, முசாஃபா தொழில்துறை மண்டலத்தில் உள்ள அல் ரவ்தா சாலையில் (E30) டிரக்குகள் பீக்-ஹவர் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7. துபாயில் புதிய பாதை குறியீடுகள் மற்றும் மேல்நிலை கேமராக்கள்

நவம்பர் மாதத்தில் துபாயின் சில சாலைகளில் மேல்நிலை கேமராக்களுடன் ஏற்கெனவே முந்தி செல்வதற்கு அல்லது பாதையை மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பாதைகள் திடமான கோடுகளாக மாற்றப்பட்டு மேற்கூறியவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • இத்திஹாத் சாலை
  • பாக்தாத் ஸ்ட்ரீட்
  • ஏர்போர்ட் டன்னல்
  • E311 & E611

இந்த சாலைகளில் விடுபட்ட கோடாக இல்லாமல் தொடர்ச்சியான வெள்ளைக் கோடுகளாக இருக்கும் பாதையை தவறுதலாகக் கடந்து சென்றால் கூட 400 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

8. புதுப்பிக்கப்பட்ட துபாய் டாக்ஸி கட்டண முறை

நவம்பர் முதல், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஸ்மார்ட் ஆப்ஸ் மூலம் முன்பதிவு செய்யும் சவாரிகளுக்கு புதிய கட்டணங்களை அறிவித்தது. இப்போது, குறைந்தபட்ச கட்டணம் 12 திர்ஹம்ஸிலிருந்து 13 திர்ஹம்ஸ் ஆக உயர்த்தப்பட்டது. டாக்ஸி கட்டணங்கள் நெரிசலான நேரங்கள், நெரிசல் அல்லாத நேரங்கள் மற்றும் இரவு நேரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

9. வாகனங்களை அபராதத்துடன் கண்டறியும் பார்கின் அமைப்பு

அக்டோபர் 2025 முதல், துபாய் காவல்துறை வாகனங்கள் Parkin மண்டலங்களுக்குள் நுழையும் போது, நிலுவையில் உள்ள அபராதங்கள் அல்லது பறிமுதல் உத்தரவுகளுடன் வாகனங்களைத் தானாகவே அடையாளம் காண முடியும்.

10. துபாயில் உள்ள மசூதிகளில் 24 மணி நேர கட்டண பார்க்கிங்

ஆகஸ்ட் 2025 முதல், மசூதி பார்க்கிங் மண்டலங்கள் 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படுகின்றன.
தொழுகை நேரங்களில் ஒரு மணி நேரம் பார்க்கிங் இலவசம்.

  • M (தரநிலை): 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம்ஸ் / 1 மணிநேரத்திற்கு 4 திர்ஹம்ஸ்
  • MP (பிரீமியம்): அதிக போக்குவரத்து நேரங்களில் (30 நிமிடங்களுக்கு 3 திர்ஹம்ஸ் / 1 மணிநேரத்திற்கு 6 திர்ஹம்ஸ்)

துபாய் முழுவதும் மொத்தம் 59 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடர்ச்சியான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளின் மூலம், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் வரும் ஆண்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஆதரவளிக்கவும் இலக்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel