துபாயின் பிரபலமான வெளிப்புற ஈர்ப்பான, குடியிருப்பாளர்களால் மிகவும் விரும்பப்படும் துபாய் கார்டன் க்ளோவின் 11வது சீசன், சாகசத்தையும் படைப்பாற்றலையும் கலக்கும் டைனோசர் பூங்கா மற்றும் ஃபேண்டஸி பூங்கா என முற்றிலும் புதிய அனுபவத்துடன் மீண்டும் திரும்பியுள்ளது. இந்த ஆண்டு 70 திர்ஹம் விலையில், துபாய் ஃபிரேமுக்கு அடுத்துள்ள ஜபீல் கேட் 3 வழியாக இந்த இரண்டு தனித்துவமான பூங்காக்களை பார்வையாளர்கள் ஆராயலாம்.
புதுப்பிக்கப்பட்ட டைனோசர் பூங்கா, பார்வையாளர்களை 230 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. 140க்கும் மேற்பட்ட அனிமேட்ரோனிக் டைனோசர்களைக் கொண்ட இந்த பூங்கா, ட்ரயாசிக் சகாப்தத்திலிருந்து (Triassic reptiles) வலிமைமிக்க கிரெட்டேசியஸ் காலம் (Cretaceous titans) வரையிலான இந்த பண்டைய உயிரினங்களின் பயணத்தைக் காட்டும் என்று கூறப்படுகிறது.
இந்த அனுபவம் நேரடியானதாகவும், பார்வையாளர்களை மூழ்கடிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் ‘Dino Ride’ஐ அனுபவிக்கலாம். மேலும், ‘Dino Cage’ முதல் ‘ Dino Extinct’ மண்டலத்தில் உள்ள பண்டைய புதைபடிவங்களைத் தோண்டும் அனுபவம் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பார்வையாளர்கள் ‘Dino Live’ நிகழ்ச்சியைப் பார்க்கலாம் மற்றும் யதார்த்தமான, நடக்கும் டைனோசர்களுடன் புகைப்படங்களை எடுக்கலாம்.
ஃபேன்டசி பூங்கா
டைனோசர் மண்டலத்திலிருந்து வெளியேறியதும், நீங்கள் ஃபேன்டசி பூங்காக்குள் நுழையும் போது வண்ணமயமான காட்சியை அனுபவிக்கலாம். பெரிய கைவினை சிற்பங்கள் மற்றும் துடிப்பான மலர் வடிவமைப்புகளால் நிரப்பப்பட்ட ஒரு உயிருள்ள கலைக்கூடம் போல அந்த இடம் காட்சியளிக்கும். ஆசிய தாய் யானை, ஒரு பிரகாசமான பிரேசிலிய மக்கா, ஒரு கம்பீரமான சைபீரிய புலி மற்றும் பிற கற்பனை படைப்புகள் உள்ளிட்ட அற்புதமான படைப்புகளை பார்வையாளர்கள் ரசிக்கலாம்.
திறக்கும் நேரம்
துபாய் கார்டன் க்ளோ ஈர்ப்பானது தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இதற்கான என்ட்ரி டிக்கெட்டுகள் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Dubaigardenglow.com ல் பார்வையாளர்களுக்காக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel