ADVERTISEMENT

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கும் 12 மணி நேர விற்பனை..!!

Published: 24 Dec 2025, 9:54 AM |
Updated: 24 Dec 2025, 10:00 AM |
Posted By: Menaka

துபாயின் மிகப்பெரிய ஷாப்பிங் கொண்டாட்டமான மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல், வருகின்ற டிசம்பர் 26 முதல் பெரிய தள்ளுபடிகள், சொகுசு கார்கள் மற்றும் மில்லியன் கணக்கான திர்ஹம் பரிசுகளுடன் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு விற்பனை நிகழ்வில் துபாய் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மற்றும் 3,500 விற்பனை நிலையங்கள் பங்கேற்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

DSF வரும் டிசம்பர் 26 அன்று தொடங்கி ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSF மெகா ராஃபிள்

ADVERTISEMENT

மேலும், 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள், பிப்ரவரி 1, 2026 வரை நடைபெறும் நகரம் தழுவிய ‘ஷாப், ஸ்கேன் & வின்’ (Shop, Scan & Win) ப்ரோமோஷன் திட்டத்தில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்பாளர்களுக்கு ஐந்து நிசான் பேட்ரோல் SE T2 2026 கார்களில் ஒன்றை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் வெற்றியாளர்கள் வாரந்தோறும் அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புரோமோஷனில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் DSF பங்கேற்கும் கடைகளில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் ரசீதை அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவேற்றினால் போதும்.

ADVERTISEMENT

அதேசமயம், மெர்காடோ மால் ஜனவரி 12 வரை பிரத்யேக DSF பிரச்சாரத்தை நடத்துகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் ரசீதுகளை ஸ்கேன் செய்து பிரத்யேக குலுக்கல்களில் பங்கேற்கலாம், இது கிறிஸ்துமஸுக்குப் பிந்தைய ஷாப்பிங் கூட்டத்தின் போது வெற்றி பெறுவதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது.

DSF 12-மணி நேர விற்பனை
இதற்கிடையில், டிசம்பர் 26 அன்று ஒரு நாள் மட்டும், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, மஜித் அல் ஃபுத்தைம் மால்கள் பிரபலமான DSF 12-மணி நேர விற்பனையை நடத்துகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பங்கேற்கும் மால்கள்:

  • மால் ஆஃப் தி எமிரேட்ஸ்
  • சிட்டி சென்டர் மிர்திஃப்
  • சிட்டி சென்டர் தேரா
  • சிட்டி சென்டர் மெய்ஸெம்
  • சிட்டி சென்டர் அல் ஷிந்தகா
  • மை சிட்டி சென்டர் அல் பர்ஷா

மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப் அல்லது சிட்டி சென்டர் தேராவில் 300 திர்ஹம்ஸ்க்கு மேல் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் SHARE செயலி மூலம் SHARE மில்லியனர் குலுக்கலிலும் பங்கேற்கலாம்.

வெற்றி பெற அதிக வாய்ப்புகள்
இந்த சீசன் முழுவதும் நடைபெறும் மற்ற DSF ப்ரோமோஷன் பின்வருமாறு:

  • ஆண்டின் மிகப்பெரிய பரிசு: தேர்ந்தெடுக்கப்பட்ட மஜித் அல் ஃபுத்தைம் மால்களில் குறைந்தபட்சம் 300 திர்ஹம்ஸ் செலவழிப்பதன் மூலம், 1 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப் பணத்தை வெல்ல ஒரு வாய்ப்பு.
  • மோதேஷ் மற்றும் ப்ளூ ரிவார்ட்ஸ் மில்லியனர் (Modesh and Blue Rewards Millionaire): துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் ஷாப்பிங் செய்பவர்கள் ஒரு மில்லியன் ப்ளூ பாயிண்டுகளை வெல்லலாம்.
  • DSF கோல்டன் டிக்கிட் (DSF Golden Tickit): டிக்கிட் பார்ட்னர் இடங்களில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு தானாகவே பங்கேற்பு வாய்ப்புகள் கிடைக்கும், இதில் 38 வெற்றியாளர்களுக்கு 10,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள டிக்கிட் பாயிண்டுகள் பரிசாக வழங்கப்படும்.

இத்தகைய ஏராளமான தள்ளுபடிகள், குலுக்கல் பரிசுகள் மற்றும் மில்லியன் கணக்கான திர்ஹாம் பரிசுகளுடன், DSF 2024–25 பதிப்பு துபாய் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஷாப்பிங் சீசன்களில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel