ADVERTISEMENT

2026 ல் தங்கத்தின் விலை அமீரகத்தில் உச்சம் தொடும்..!! தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு.!!

Published: 5 Dec 2025, 8:13 PM |
Updated: 5 Dec 2025, 8:13 PM |
Posted By: Menaka

வரும் ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக வேண்டியிருக்கலாம் என புதிய கருத்து கணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 5,000 டாலரை எட்டக்கூடும் என்று கணித்துள்ளது, இது ஒரு கிராமுக்கு சுமார் 589 திர்ஹம்ஸ்க்கு சமம் ஆகும்.

ADVERTISEMENT

ஏனெனில், தங்கம் வழக்கத்திற்கு மாறாக வலுவாக இருப்பதாகவும், அமெரிக்க டாலரை விட தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இது இப்போது அதன் 2026 கணிப்பை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,450 டாலராக உயர்த்தியுள்ளது. அதன்படி வரும் ஆண்டுகளில் 3,950 டாலர் முதல் 4,950 டாலர் வரை வர்த்தகம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, உலகளாவிய பதட்டங்கள், அதிகரித்து வரும் அரசாங்கக் கடன் மற்றும் வலுவான மத்திய வங்கி தேவை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, பல பெரிய நிதி நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதேபோன்ற கணிப்புகளை வெளியிட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

விலை ஏற்றத்திற்கு காரணமாகும் மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கம் வாங்குவது என்பது இந்த ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்து உலகளாவிய நிச்சயமற்ற தன்மையிலிருந்து பாதுகாக்க பல நாடுகள் தங்கள் தங்க இருப்புக்களை அதிகரித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, 2025 ஆம் ஆண்டில் 853 டன்னிலிருந்து 2026 ஆம் ஆண்டில் 1,053 டன்னாக மத்திய வங்கி கொள்முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதுவரை பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த நிலைகளில் ஒன்றாகும். இந்த அதிக கொள்முதல் அமீரக மக்கள் உட்பட நுகர்வோருக்குக் கிடைக்கும் தங்கத்தின் அளவைக் குறைக்கிறது.

ADVERTISEMENT

UAE ​​வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளக்கூடியவை

மேற்கூறப்பட்ட கணிப்புகள் சரியாக நிரூபிக்கப்பட்டால், அமீரகத்தில் தங்கத்தின் விலையானது, தேவை குறைவான நேரங்களில் ஒரு கிராமுக்கு 466 திர்ஹம்ஸ் ஆகவும், அதிகமான தேவை எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் ஒரு கிராமுக்கு 525 திர்ஹம்ஸ் வரை உயரும் எனவும், உலகளாவிய விலைகள் 5,000 டாலரை நெருங்கினால் ஒரு கிராமுக்கு 589 திர்ஹம்ஸ் வரை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் சேமிப்பு, பரிசுகள் அல்லது திருமணங்களுக்கு வழக்கமாக தங்கம் வாங்குபவர்கள், 2025 மற்றும் 2026 வரை விலைகள் தொடர்ந்து உயரும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே தங்கம் வாங்குவதை திட்டமிடுவதன் மூலம் பயனடையலாம்.

இதுபோன்ற தங்கத்திற்கான வலுவான தேவை, குறைந்த விநியோகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவை தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்துவதால், வரும் ஆண்டுகளில் இது அமீரக மக்களுக்கு கணிசமாக அதிக செலவுகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel