துபாய் டியூட்டி ஃப்ரீ டிராவில் கத்தாரில் வசிக்கும் ஒரு இந்தியருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற சமீபத்திய துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் அவர் 1 மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளார்.
தோஹாவைச் சேர்ந்த 32 வயதான ஜோமி ஜான் என்பவர், டிசம்பர் 5 அன்று ஆன்லைனில் வாங்கிய தனது 4002 என்ற டிக்கெட் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீரிஸ் 527-இன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஜான், இந்த டிக்கெட்டின் விலையை தனது ஒன்பது சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த பிரபலமான ப்ரோமோஷனில் பங்கேற்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த குழுவினர் டிக்கெட்டுகளை மாறி மாறி வாங்கி வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் “இது எங்கள் குழுவிற்கு கிடைத்த ஒரு பெரிய வரம். துபாய் டியூட்டி ஃப்ரீக்கு மிக்க நன்றி” என்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ஜான் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மில்லினியம் மில்லியனர் பரிசை வென்ற 267வது இந்தியர் என்ற பெருமையை ஜான் பெற்றுள்ளார். நீண்ட காலமாக நடைபெறும் இந்த ப்ரோமோஷன் திட்டத்தில், இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் டிக்கெட் வாங்குபவர்களாகத் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த டிரா துபாய் டியூட்டி ஃப்ரீயின் 42வது ஆண்டு நிறைவுக்கு முந்தைய நாள் நடத்தப்பட்டது இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel