ADVERTISEMENT

பிக் டிக்கெட்டில் இந்தியருக்கு அடித்த 25 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசு!! 15 ஆண்டுகளுக்கு பிறகு அடித்த ஜாக்பாட்டால் வெற்றியாளர் உற்சாகம்….

Published: 4 Dec 2025, 12:53 PM |
Updated: 4 Dec 2025, 1:08 PM |
Posted By: Menaka

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர், டிசம்பர் 3 ஆம் தேதி நேரலையில் நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபியின் சீரிஸ் 281 டிராவில் 25 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வென்றதன் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார்.

ADVERTISEMENT

கேரளாவைச் சேர்ந்த 52 வயதான தரக் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் (quality control supervisor) ராஜன் பி வி, நவம்பர் 9 ஆம் தேதி வாங்கிய டிக்கெட் எண் 282824 உடன் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். 30 ஆண்டுகள் குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் வசித்து வரும் ராஜன், சுமார் 15 ஆண்டுகளாக பிக் டிக்கெட்டில் பங்கேற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜன் தனது பெயர் அறிவிக்கப்பட்டபோது டிராவை நேரலையில் பார்க்கவில்லை, ஆனால் தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பவுச்ராவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்த தருணத்தில், அவரது உற்சாகத்தின் வெளிப்பாடு விவரிக்க முடியாததாக இருந்தது என கூறியிருக்கிறார். மேலும், அவர் 16 நண்பர்கள் கொண்ட குழுவாக இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இந்த நண்பர்கள் குழு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒன்றாகப் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் “இந்த வென்ற டிக்கெட் எனது குழுவுடன் வாங்கப்பட்டது. இது எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே ஒரு கனவு நனவாகும் தருணம்” என்று ராஜன் கூறியுள்ளார்.

மேலும், 25 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட் பரிசை குழுவிற்குள் சமமாகப் பிரிக்கவுள்ளதாகவும்,தனது பங்கைக் கொண்டு, தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கவும், தேவைப்படுபவர்களுக்கு உதவவும், தனது குடும்பத்திற்காக ஒரு சிறிய தொகையை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் ராஜன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கிராண்ட் பரிசு தவிர, டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் மற்ற பிரிவுகளிலும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்:

ட்ரீம் கார் வெற்றியாளர்:

அபுதாபியில் வசிக்கும் வங்காளதேச வெளிநாட்டவரான முகமது ரூபல் சித்திக் அகமது (டிக்கெட் எண் 020002) ‘Maserati Grecale’ காரை வென்றுள்ளார்.

100,000 திர்ஹம் வெற்றியாளர்கள் (10 வெற்றியாளர்கள்):
இந்தியா, வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், சீனா, கனடா மற்றும் அமீரகத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தலா 100,000 திர்ஹம் பரிசுகளை வென்றவர்களில் அடங்குவர்.

முகமது கைமுல்லா ஷேக் முகமது நாசிர், முகமது மான்சர் ஆசாத் ஃபஸ்லுல் கரீம், அன்டோனியோ பிளாசாபாஸ், லின் ஜாவோ, டின்டோ ஜெஸ்மோன், அம்ரு மியா ஆஷிக் மியா, முகமது அரிஃபுல் இஸ்லாம் முகமது ஜாபர், யஹியா அல்மாஸ்ரி, சுனில் குமார் மற்றும் ராகேஷ் குமார் கோட்வானி ஆகியோர் வெற்றியாளர்களில் அடங்குவர்.

இந்தியருக்கான அதிர்ஷ்டத் தொடர்

இந்தியரின் தொடர்ச்சியான முக்கிய வெற்றிகளில் இது சமீபத்திய வெற்றியாகும்.

  • அக்டோபரில், அபுதாபியில் வசிக்கும் சரவணன் வெங்கடாசலம், திர்ஹம்ஸ் 25 மில்லியன் வென்றார்.
  • புதன்கிழமை நடைபெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன், டிராவின் போது ராஜனின் வெற்றி டிக்கெட்டை நேரில் தேர்ந்தெடுத்தார்.

இதனையடுத்து பிக் டிக்கெட் இப்போது 2026 ஆம் ஆண்டின் முதல் டிராவிற்கு தயாராகி வருகிறது, இதில் 30 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட் உள்ளது. இதற்கான வெற்றியாளர் ஜனவரி 3 அன்று அறிவிக்கப்படுவார்.
மேலும் பல்வேறு பரிசுகளும் வழங்கப்படும். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் கிடைக்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel