ADVERTISEMENT

காசாவிற்கு 10 மில்லியன் உணவுகளை வழங்கும் துபாய்.!! தன்னார்வளர்களுக்கு அழைப்பு விடுத்த துபாய் ஆட்சியாளர்!!

Published: 1 Dec 2025, 9:13 AM |
Updated: 1 Dec 2025, 9:14 AM |
Posted By: Menaka

துபாய் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய மனிதாபிமானப் பணிகளில் ஒரு பகுதியாக, காசாவில் உள்ள பொதுமக்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுகளை தயாரித்து அனுப்புவதற்கான நாடு தழுவிய முயற்சியை ஆதரிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

டிசம்பர் 7 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இதற்கான பேக்கிங் நிகழ்வில் சேர விரும்பும் பங்கேற்பாளர்கள் www.MBRship.ae என்ற முகவரியில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 7 ஆம் தேதி எக்ஸ்போ சிட்டியில் உள்ள ‘Dubai Exhibition Centre’இல் நடைபெறும் தன்னார்வ நிகழ்வின் போது உணவுகள் சேகரிக்கப்படும், அதன் பிறகு அவை காசா மக்களுக்கு பெரிய அளவிலான நிவாரணங்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஷேக் முகமது பின் ரஷீத் மனிதாபிமானக் கப்பலில் (Humanitarian Ship) ஏற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முயற்சி குறித்து X தளத்தில் அறிவித்த ஷேக் முகமது, இந்த பிரச்சாரம் காசா மக்களுக்கு “அன்பு, ஒற்றுமை மற்றும் ஆதரவின் செய்திகளை” அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, “எங்கள் சகோதர சகோதரிகளுடனான எங்கள் ஒற்றுமை தொடர்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தன்னார்வ முயற்சியானது, கடும் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக நிற்க ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

இந்த பிரச்சாரத்தை முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகள் (MBRGI) ஏற்பாடு செய்துள்ளது, இது காசாவிற்கான அமீரகத்தின் பரந்த மனிதாபிமான நடவடிக்கைகளுடன் இணைந்து நடத்துகிறது. விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கப்பலின் பயணம், உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு உதவி வழங்குவதற்கான MBRGI இன் 43 மில்லியன் திர்ஹம் உறுதிமொழியின் ஒரு பகுதியாகும்.

இது குறித்து அமைச்சரவை விவகார அமைச்சரும் MBRGI இன் பொதுச் செயலாளருமான முகமது அல் கெர்காவி அவர்கள் பேசிய போது, இந்த முயற்சி ஒற்றுமை மற்றும் மனிதாபிமான நடவடிக்கை மூலம் துன்பத்தை நம்பிக்கையாக மாற்றுவதில் அமீரக தலைமையின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், காசாவை மையமாகக் கொண்ட நிவாரண முயற்சிகளுக்கு அமீரக சமூகத்தின் நிலையான ஆதரவைக் குறிப்பிட்டு, தன்னார்வலர்களின் வலுவான வருகையை அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. “இந்த பிரச்சாரம் பரந்த பங்கேற்பை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம், தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்க்கையில் சிறந்த வாய்ப்பை வழங்கவும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவுவார்கள்” என்று அல் கெர்காவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடனான இரண்டு வருட மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு MBRGI வழங்கவிருக்கும் சமீபத்திய உதவியே இந்த முக்கியமான உணவு பிரச்சாரமாகும். 2023 ஆம் ஆண்டில், ஷேக் முகமது பாலஸ்தீனியர்களுக்கு அவசர உதவியாக 50 மில்லியன் திர்ஹம் வழங்க உத்தரவிட்டார், மேலும் செப்டம்பர் 2024 இல், ‘Dubai Humanitarian’ நிறுவனம் எகிப்தின் அல் அரிஷ் துறைமுகம் வழியாக 71 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

காசாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், இந்த மனிதாபிமான முயற்சி ஒரு முக்கியமான நிவாரணத்தை வழங்கும. கடந்த மாதம் அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட போர்நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும், அவ்வப்போது மீறல்கள் தொடர்ந்து வன்முறையை ஏற்படுத்தி வருகின்றன என கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel