ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் இந்த நிகழ்வைக் கொண்டாடுபவர்களுக்கு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அந்த செய்தியில், கிறிஸ்துமஸைக் குறிக்கும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், கிறிஸ்தவ சமூகங்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஷேக் முகமது தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் அனைத்து மக்களிடையேயும் இரக்கம் மற்றும் அன்பு தொடர்ந்து வளரும், அமைதி, சகோதரத்துவம் மற்றும் மனித சகவாழ்வின் மதிப்புகள் மேலோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும், கிறிஸ்துமஸ் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். “துபாயிலிருந்து உலகம் முழுவதும், உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இறைவன் நம் அனைவரையும் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிப்பாராக” என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமீரகத் தலைவர்கள் பகிர்ந்து கொண்ட இந்தச் செய்திகள், பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையில் சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் இணக்கமான சகவாழ்வுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel