ADVERTISEMENT

UAE: தமிழருக்கு அடித்த 25 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்.. தனக்கு மட்டும் கிடைத்த தொகையை 25 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவிப்பு!!

Published: 21 Jan 2026, 9:04 AM |
Updated: 21 Jan 2026, 9:12 AM |
Posted By: Menaka

பிக் டிக்கெட் வெற்றியாளர்கள் பொதுவாக தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது, சொத்து வாங்குவது அல்லது பாதுகாப்பான முதலீடுகளைச் செய்வது பற்றிப் பேசுவார்கள். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு தமிழர் தனது வாழ்க்கையை மாற்றும் வெற்றிக்குப் பிறகு மிகவும் வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த சரவணன் வெங்கடாசலம் என்பவர், முற்றிலும் சொந்தமாக வென்ற டிக்கெட்டை வாங்கிய போதிலும், தனது 25 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை தனது குடும்பத்திற்காக சேமித்து வைத்திருப்பதற்குப் பதிலாக, அவர் அதை 25 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

அவரது இந்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அபுதாபியில் ஆறு ஆண்டுகளாக வசித்து வரும் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரான சரவணன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிராவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 25 மில்லியன் திர்ஹம்ஸ் வென்ற போதிலும் பணத்தை நிர்வகிப்பதில் கவனமாக அணுகுமுறையை எடுத்துள்ளார். அவரது பங்கில் ஒரு பகுதி அவரது குழந்தையின் கல்விக்காக ஒதுக்கவும் , மீதமுள்ளவை நீண்டகால பயன்பாட்டிற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பிக் டிக்கெட் டிராக்களில் பங்கேற்கப் போவதாகக் கூறும் அவர், மற்றவர்களும் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்குமாறும் ஊக்குவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்று கடந்த 2025 ஆம் ஆண்டில், பிக் டிக்கெட் அபுதாபியானது ரொக்கம் மற்றும் கார்கள் முதல் பிரீமியம் தங்கக் கட்டிகள் வரை கிட்டத்தட்ட 300 மில்லியன் திர்ஹம் பரிசுகளை வழங்கி இருக்கின்றது. அத்துடன், 17 மில்லியனர்கள் மற்றும் 12 சொகுசு கார் வெற்றியாளர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களைக் கொண்டாடியுள்ளது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த பிக் டிக்கெட்டை வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் bigticket.ae இல் மற்றும் சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் வாங்கிக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel