துபாயின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான அல் முஹைஸ்னா செகண்டில் நள்ளிரவு நேரத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார், மேலும் இந்த சம்பவம் இரு தரப்பினரின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக துபாய் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற பதிவுகளின் படி, தொழிலாளர் விடுதி வளாகத்தின் அருகே ஒரு பாதசாரி iமீது வாகனம் மோதியதாக துபாய் காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்ததில் இருந்து வழக்கு தொடங்குகிறது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். விசாரணையின் போது மதிப்பாய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் இரு தரப்பினரும் குற்றவாளிகள் என்பதைக் காட்டியதாக உள்ளூர் அறிக்கைகள் கூறுகின்றன.
அதாவது, ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது சாலை நிலைமைகளையோ அல்லது பாதசாரிகள் இருப்பதையோ முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் வாகனம் ஓட்டியதையும், அதே நேரத்தில், காயமடைந்த நபர் நியமிக்கப்பட்ட பாதசாரி கிராசிங்க்க்கு வெளியே சாலையைக் கடந்ததுடன் சம்பவம் நடந்த நேரத்தில் அவர் மது அருந்தியிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆகவே, இரு நபர்களும் விபத்துக்கு காரணம் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கவனக்குறைவும், பாதசாரிகள் பாதுகாப்பற்ற முறையில் சாலையை கடந்ததும் மோதலுக்கு வழிவகுத்த செயல்கள் என்று நீதிபதி கூறியுள்ளார்.
கூட்டாட்சி சட்டத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம் இந்த வழக்கை இரு தரப்பு தவறையும் உறுதி செய்து ஒற்றை குற்றமாகக் கருதியது. இதன் விளைவாக, ஓட்டுநருக்கு 1,000 திர்ஹமும், அதே நேரத்தில் பாதசாரிக்கு 5,000 திர்ஹமும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
கடுமையான விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் இருவரும் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel