ADVERTISEMENT

அமீரகத்தில் டோல் கட்டணம் செலுத்துமாறு பரவும் செய்தி.. எச்சரிக்கும் அதிகாரிகள்..

Published: 21 Jan 2026, 5:28 PM |
Updated: 21 Jan 2026, 5:30 PM |
Posted By: Menaka

கடந்த சில நாட்களாகவே, அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பலருக்கு டோல் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றும் விரைவில் செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறி போலி அபுதாபி டோல் கட்டணச் செய்திகள் அதிகமாக வருவதாக செய்திகள் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமீரக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் குடியிருப்பாளர்கள் 4 திர்ஹம் வரை நிலுவையில் உள்ள டோல் கட்டணங்கள் குறித்து எச்சரிக்கும் SMS எச்சரிக்கைகளைப் பெறுவதாகவும், 100 திர்ஹம் அபராதம் மற்றும் பிளாக் பாயிண்ட்களை தவிர்க்க விரைவாகச் செயல்பட அழுத்தம் கொடுத்ததாகவும் பல குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தச் செய்திகளில் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் மற்றும் “பாதுகாப்பான கட்டண போர்ட்டலைத் திறக்க Yக்கு பதிலளிக்கவும்” போன்ற வழிமுறைகள் இருந்தன என்பதையும் குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மோசடி செய்திகள் எப்படி இருக்கும்?

“DARB-Alert” என்ற தலைப்பில் குடியிருப்பாளர் ஒருவருக்கு வந்துள்ள போலியான செய்தியில், டோல் கட்டணம் தாமதமாகிவிட்டதாகவும் உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல், “இறுதி அமலாக்க எச்சரிக்கை (Final Enforcement Warning)” என விவரிக்கப்படும் மற்றொரு பதிப்பு குறித்து ஜனவரி 19 அன்று Reddit தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார், இதில் வேறு கட்டண இணைப்பு இடம்பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், UAE ​​அல்லாத தொலைபேசி எண்களிலிருந்து செய்திகள் அனுப்பப்பட்டதை பயனர்கள் கவனித்தனர், இதனால் ஆன்லைனில் விவாதங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, எந்த இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன்பு அனுப்புநரின் நாட்டின் குறியீட்டைச் சரிபார்க்க வேண்டும் என்று பலர் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், சிலர் SMS செய்திகளுக்கு பதிலளிப்பதை விட, அதிகாரப்பூர்வ Darb செயலியில் நேரடியாக தங்கள் கணக்குகளை சரிபார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Q Mobility இலிருந்து அதிகாரப்பூர்வ எச்சரிக்கை

இந்நிலையில், அபுதாபியின் ‘Darb’ டோல் அமைப்பின் ஆபரேட்டரான Q Mobility, ஆன்லைன் மோசடி முயற்சிகள் குறித்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 21 அன்று, நிறுவனம் X தளத்தில் வெளியிட்ட பதிவில், “குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பு சரியானதா, அது அதிகாரப்பூர்வ Q Mobility கணக்கிலிருந்து அனுப்பப்பட்டதா என்பதை எப்போதும் சரிபார்க்கவும்” என்று கூறியுள்ளது.

Darb தொடர்பான சேவைகளுக்கான ஒரே நம்பகமான தளங்கள்:

  • Darb மொபைல் அப்ளிகேஷன்
  • அதிகாரப்பூர்வ வலைத்தளம்: darb.qmobility.ae

இதற்கிடையில் கடந்த மாதம், Q Mobility, Darb மற்றும் Mawaqif கட்டணங்களுக்கு அங்கீகரிக்கப்படாத கட்டண செயலிகள் பயன்படுத்தப்படுவது குறித்து குடியிருப்பாளர்களை எச்சரித்தது. அதேபோல், பயனர்கள் Darb மற்றும் TAMM மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.

உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

  • தேவையற்ற கட்டணச் செய்திகளில் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
  • அனுப்புநரின் தொலைபேசி எண் மற்றும் நாட்டின் குறியீட்டைச் சரிபார்க்கவும்
  • darb செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே கட்டணங்களைச் சரிபார்க்கவும்
  • SMS இணைப்புகள் மூலம் தனிப்பட்ட அல்லது கட்டண விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel