கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனிக்கிழமை துபாயில் தங்கத்தின் விலை முதல் முறையாக கிராமுக்கு 600 திர்ஹம்ஸ் என்ற அளவைத் தாண்டியது, இது தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் வலுவான முதலீட்டாளர் தேவையால் உந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
துபாய் நகைக் குழுமத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமை காலை 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 601 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்தது, இது உலகளாவிய தங்க விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 டாலரை நெருங்கி வருவதை பிரதிபலிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இதேபோல, மற்ற தங்க வகைகளும் புதிய உச்சங்களைத் தொட்டன. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 556 திர்ஹம்ஸ், 21 காரட் 533.5 திர்ஹம்ஸ் , 18 காரட் 457.25 திர்ஹம்ஸ், மற்றும் 14 காரட் தங்கம் கிராமுக்கு 356.75 திர்ஹம்ஸ் என உயர்வைச் சந்தித்துள்ளன.
இந்த விலை உயர்வு, தங்கத்தை விற்க விரும்பும் ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு சாத்தியமான வாய்ப்பை வழங்குகிறது.
அதே நேரத்தில் உலக சந்தையில், இந்த வாரம் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,988.56 டாலரில் முடிவடைந்தது, உலகளவில் நடந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அமீரகத்தில் தங்கத்தின் விலை 500 திர்ஹம்சை தாண்டியது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கிய நிலையில் தற்பொழுது 600 திர்ஹம்சையும் தாண்டி புதிய உச்ச விலையை தொட்டிருப்பது அமீரகத்தில் தங்கம் வாங்க நினைத்திருக்கலாம் அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel