துபாயில் சனிக்கிழமை இரவு பல குடியிருப்பாளர்கள் வானத்தில் ஒளிரும் விசித்திரமான பச்சை விளக்குகளின் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டு இந்த ஒளி எங்கிருந்து வருகின்றது என தெரியவில்லை என்று கேள்வியை எழுப்பியிருந்தனர்.
ஆன்லைனில் பரவலாகப் பரப்பப்பட்ட இந்த கிளிப்புகள், இரவில் விசித்திரமான வெளிச்சம் தென்பட்டதால் மக்கள் குழப்பத்துடனும் உற்சாகத்துடனும் மேலே பார்ப்பதைக் காட்டியது. துபாயின் கவனத்தை ஈர்த்த இந்த மர்ம வெளிச்சத்திற்கு பின்னால் உண்மையில் என்ன இருந்தது என்பது பற்றி காணலாம்.
புர்ஜ் கலீஃபா பகுதிக்கு அருகில் வானத்தில் பச்சை லேசர் கற்றைகள் ஒளிர்வதைக் காட்டும் வீடியோக்களைப் பார்த்த சிலர், அந்த ஒளியை நெட்ஃபிக்ஸ் தொடரான ’ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ இன் காட்சிகளுடன் ஒப்பிட்டும், மற்றவர்கள், ஸ்கைடைவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் ஏலியெண்கள் எனவும் பலவாறு யூகித்துக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு அந்த ஒளி குறித்து குடியிருப்பாலர்களிடையே பல யூகங்கள் இருந்த போதிலும், ஒளியானது புர்ஜ் கலீஃபா, துபாய் ஃபிரேம் அல்லது ஜபீல் பூங்காவிலிருந்து தோன்றவில்லை என்பதை செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதே நேரத்தில், துபாய் இன்டர்நேஷனல் ஃபினான்ஷியல் சென்டரில் (DIFC) நடைபெற்ற ஒரு விளம்பர நிகழ்வின் லேசர் கற்றைகளால் இந்த ஒளி தோன்றியதாகக் கூறப்படுகிறது. தாழ்வான மேகங்களிலிருந்து அந்தக் கற்றைகள் பிரதிபலித்தன, இது நகரம் முழுவதும் வசிப்பவர்களுக்கு அசாதாரணமாகத் தோன்றிய ஒரு குறிப்பிடத்தக்க பச்சை ஒளியை உருவாக்கியது என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் விளக்கமளித்துள்ளார். DIFC இன் சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகள், லேசர் காட்சி வரவிருக்கும் ஒரு நிகழ்விற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறுகின்றன.
உண்மை இவ்வாறு இருக்க நேற்று இரவு முழுவதும் துபாய்வாசிகள் அனைவரும் இதனை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தது அமீரகத்தில் இந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel