ADVERTISEMENT

விரைவில் தொடங்கும் ரமலான் மாதம்.. UAE ஃபத்வா கவுன்சில் வெளியிட்ட தகவல்!!

Published: 19 Jan 2026, 1:05 PM |
Updated: 19 Jan 2026, 6:01 PM |
Posted By: Menaka

இஸ்லாமிய மாதமான ஷஃபான் மாதத்தின் தொடக்கத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமீரக ஃபத்வா கவுன்சில், நாட்டின் சிறப்பு வானியல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பிறை நிலவு பற்றிய அறிவியல் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு ஜனவரி 19 திங்கள் கிழமை, இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி 1447 வருடத்தின் ரஜப் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் விளைவாக, ஜனவரி 20 செவ்வாய், ஹிஜ்ரி 1447 ஷபான் மாதத்தின் முதல் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாட்காட்டியில், ஷபான் மாதம் ரமலானுக்கு முந்தைய மாதமாகும். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை இறைவணக்கத்திலும், விடியற்காலை முதல் சூரியன் மறைவு வரை கடைப்பிடிக்கப்படும் ஒரு மாத கால நோன்பிலும் செலவிடுகின்றனர்.

2026 ஆம் ஆண்டு ரமலான் எப்போது தொடங்கும்?
பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும், இது பிறை நிலவைப் பார்ப்பதைப் பொறுத்தது ஆகும். அந்தவகையில், ஷாபான் மாதம் 29 ஆம் தேதி, அதிகாரப்பூர்வ பிறை பார்க்கும் குழுக்கள் கூடி ரமலான் தொடக்கத்தை உறுதிப்படுத்தும். பிறை தென்பட்டால், அடுத்த நாள் ரமலான் தொடங்கும்.

ADVERTISEMENT

இந்த காலவரிசையின் அடிப்படையில், ரமலான் 2026 பிப்ரவரி 18 புதன்கிழமை அல்லது பிப்ரவரி 19 வியாழக்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானியல் கணக்கீடுகள் தற்போது வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2026 தொடக்கத் தேதியாகக் கூறுகின்றன, இருப்பினும் இறுதி முடிவு அதிகாரப்பூர்வ நிலவைப் பார்ப்பதைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் ரமலான் முடிவானது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டின் முதல் நீண்ட வார விடுமுறையையும் கொண்டுவரும். ரமலான் மாதம் முடிந்து கொண்டாடப்படும் நோன்பு பெருநாள் எனும் ஈத் அல் ஃபித்ருக்காக நீண்ட நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும் என்பதால் இந்த நாட்களை அமீரகத்தில் கழித்தும் பலர் இந்த விடுமுறையை பயன்படுத்தி கொண்டு சொந்த ஊருக்கு செல்வதையும் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel