புனித ரமலான் மாதத்தில் அமீரகம் முழுவதும் உள்ள மசூதிகள் வழிபாட்டாளர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் நிலையில், பார்க்கிங் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், பொது பாதுகாப்பை உறுதி செய்யவும், அபுதாபி காவல்துறை ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ரமலான் காலத்தில் குறிப்பாக தொழுகை நேரங்களில், மசூதிகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக காவல்துறை X இல் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தராவீஹ் மற்றும் பிற தொழுகைகளின் போது சீரற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்து ஓட்டத்தை சீர்குலைத்து குடியிருப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் முறையற்ற நடத்தையாகக் கருதப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும், சாலைகளில் அல்லது நியமிக்கப்படாத பகுதிகளில் நிறுத்துவதற்குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொழுகை நேரங்களில் பதிவான பல பொதுவான மீறல்களையும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்:
- மற்ற வாகனங்கள் வெளியேறுவதைத் தடுக்கும் இரட்டை பார்க்கிங்
- நடைபாதைகளில் நிறுத்துதல், பாதசாரிகள் அணுகலைத் தடுப்பது
- முழு போக்குவரத்து பாதைகளையும் தடுப்பது, குறிப்பாக இன்டர்செக்ஷன்கள் மற்றும் பரபரப்பான சாலைகளுக்கு அருகில் போக்குவரத்தை தடுக்கும் வகையில் பார்க்கிங் செய்வது
- தொழுகைக்குப் பிறகு நீண்ட நேரம் நிறுத்தப்படுவது நெரிசல் மற்றும் தாமதங்களுக்கு வழிவகுக்கிறது
எனவே இந்த ரமலான் மாதத்தின் போது, சுமூகமான போக்குவரத்து இயக்கத்திற்கும் பாதுகாப்பான நகர சூழலுக்கும் சரியான பார்க்கிங் நடைமுறைகளைப் பராமரிப்பது அவசியம் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel