ADVERTISEMENT

ஷார்ஜாவில் புதிதாகத் திறக்கப்பட்ட அல் நஸ்ர் மசூதி: நவீன வடிவமைப்பில் ஜொலிக்கும் பிரார்த்தனைக் கூடம்.!!

Published: 19 Feb 2026, 11:11 AM |
Updated: 19 Feb 2026, 11:11 AM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அல் நஸ்ர் மசூதியானது (Al Nasr Mosque), அதன் தனித்துவமான கட்டிடக்கலை வடிவமைப்பால் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. அல் தெய்தில் (Al Dhaid) அமைந்துள்ள இந்த மசூதி, அதன் அற்புதமான தேன்கூடு வடிவ கண்ணாடி பேனல்கள், மென்மையான திருப்பத்துடன் உயர்ந்துள்ள மினாரா மற்றும் நவீன கட்டிடக்கலை வடிவமைப்பு ஆகியவற்றால் தனித்து நிற்கிறது.

ADVERTISEMENT

திறந்த பிரார்த்தனை இடங்கள் மற்றும் அமைதியான நிலப்பரப்பு சூழலுடன், மசூதி ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், இஃப்தார் வேளையில் வரையறுக்கதக்க ஒரு புதிய அடையாளமாக விளங்குகிறது. ஜபல் உமர் (Jabal Omar) சுற்றுப்புறத்தில் உள்ள இந்த மசூதியை ரமலானுக்கு சில நாட்களுக்கு முன்பு, செவ்வாய்க்கிழமை அன்று ஷேக் சுல்தான் பின் அகமது பின் சுல்தான் அல் காசிமி அவர்கள் திறந்து வைத்தார். 7,800 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்த மசூதி, ஷார்ஜாவின் மிகவும் தனித்துவமான கட்டிடக்கலை அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

மசூதியின் தனிச்சிறப்பம்சம்

மசூதியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் கோள வடிவ கண்ணாடி டூம் ஆகும், இது 20 மீட்டர் விட்டம் மற்றும் 16 மீட்டர் உயரம் கொண்டது. மசூதி மேற்கூரையின் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை உள்ளடக்கிய இந்த டூம், தேன்கூடு வடிவ கண்ணாடி பேனல்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நாள் முழுவதும், இது இயற்கை ஒளியை உட்புறத்தில் அனுமதிக்கிறது. எனவே, பிரார்த்தனை மண்டபத்திற்குள் நன்கு வெளிச்சமான சூழலை இது உருவாக்குகிறது.

ADVERTISEMENT

அதன் அருகில், முறுக்கு வடிவத்துடன் கூடிய 38 மீட்டர் உயர மினாரா உள்ளது. இது பாரம்பரிய நேரான மினாரட்களைப் போலல்லாமல், அதன் செதுக்கப்பட்ட வடிவமைப்பு மசூதிக்கு ஒரு சமகால தோற்றத்தை அளிக்கிறது. மசூதியின் உட்புற வசதியைப் பார்க்கும் போது, பிரதான பிரார்த்தனை மண்டபம் வழிபாட்டாளர்களுக்கு 12 வரிசைகளைக் கொண்டுள்ளது.

இட வசதிகள்

மசூதியில் மொத்தம் 1,325 வழிபாட்டாளர்கள் வரை பிரார்த்தனை செய்ய முடியும். பிரதான மண்டபத்தில் 470 பேர் இருக்கலாம், அதே நேரத்தில் முற்றம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் 1,180 பேர் வரை இருக்க முடியும். இவற்றுடன் ஒரு தனி பெண்கள் பிரார்த்தனை மண்டபம் 145 வழிபாட்டாளர்களுக்கு இடமளிக்கும்.

ADVERTISEMENT

மசூதிக்கு வெளியே, நுழைவாயிலில் ஒரு நீரூற்று மற்றும் புல் மற்றும் கான்கிரீட் பெஞ்சுகள் கொண்ட நிலப்பரப்பு தோட்டங்கள் பார்வையாளர்களை வரவேற்கின்றன. இந்த அமைப்பு குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக சூரிய அஸ்தமனத்தின் போது அமைதியான சூழலை வழங்குகிறது.

இந்த வாரம் மக்ரிப் தொழுகையில் கலந்து கொண்ட வழிபாட்டாளர்கள் மசூதியை நவீன மற்றும் ஆழ்ந்த ஆன்மீகத்தின் அடையாளம் என்று விவரித்துள்ளனர். கிளாஸ் டோம் வழியாக சூரிய ஒளி ஊடுருவுவது ஒரு தனித்துவமான அமைதி உணர்வை உருவாக்குகிறது என்றும் பலர் கூறியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel