ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு கடைபிடிக்கப்படுவதால், சாலை அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஷார்ஜா காவல்துறையானது வாகனம் ஓட்டும்போது சில வினாடிகள் ஏற்படும் கவனச்சிதறல் கூட கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.
அதாவது, மொபைல் போன் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற அலட்சியம் மற்றும் பிற கவனச்சிதறல்கள் ஆகியவை கடுமையான போக்குவரத்து விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நெடுஞ்சாலைகள் மற்றும் பரபரப்பான சாலைகளில் சிறிய கவனச்சிதறல்கள் கூட, விரைவாக மோதல்களுக்கு வழிவகுக்கும், இதனால் கடுமையான காயங்கள் அல்லது இறப்புகள் ஏற்படும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அமீரக போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ், மொபைல் போன் பயன்பாடு அல்லது வேறு எந்த வழியிலும் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டினால், 800 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு போக்குவரத்து புள்ளிகள் விதிக்கப்படும் என்பதையும் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.
எனவே, ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாக ரமலான் மாதத்தில் சாலையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், செய்தி ஊடகம் ஒன்று நடத்தும் ‘Safe Roads during Ramadan’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, புனித மாதத்தில் பொறுப்பான வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை ஓட்டுநர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.வாகனம் ஓட்டும் போது ஏற்படும் எந்தவொரு கவனச்சிதறலும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பிரச்சாரம் வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel