ADVERTISEMENT

ஈத் அல் பித்ர் 2026: அமீரகத்தில் அரசு, தனியார் துறைகளுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு!!

Published: 23 Feb 2026, 12:18 PM |
Updated: 23 Feb 2026, 12:24 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளத்திற்கான கூட்டாட்சி ஆணையம் மற்றும் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT

அரசு மனிதவளத்திற்கான கூட்டாட்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அரசு நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு, ஈத் அல் பித்ர் விடுமுறை மார்ச் 19, 2026 வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 22, 2026 ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும். அதையடுத்து, அதிகாரப்பூர்வ வேலை நேரம் மார்ச் 23, 2026 திங்கள் அன்று மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், MoHRE வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, மார்ச் 19, 2026 வியாழக்கிழமை முதல் மார்ச் 21, 2026 சனிக்கிழமை வரை விடுமுறை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரமலான் 30 நாட்கள் நீடித்தால், தனியார் துறை விடுமுறை மார்ச் 22, 2026 ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

எவ்வாறாயினும், அமீரகத்தில் உள்ள தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களில் ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறையாக கொண்டவர்களுக்கும் வியாழன் முதல் ஞாயிறு வரை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

இந்த அறிவிப்பு நாடு தழுவிய அளவில் பொருந்தும் என்பதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் துறை விடுமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு ஷவ்வால் தொடக்கத்தைக் குறிக்கும் பிறையை பார்க்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்ப்பதற்கான குழு ரமலான் மாதம் 29 ஆம் தேதி (மார்ச் 18) கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மார்ச் 18 மாலையில் பிறை தென்பட்டால், அந்த நாளில் ரமலான் முடிவடையும். அன்று பிறை காணப்படாவிட்டால், ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும். எனவே ஈத் அல் பித்ர் பண்டிகையானது மார்ச் 20 ம் தேதி கொண்டாடப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel