ADVERTISEMENT

UAE: பள்ளிப் பேருந்து பயணங்கள் இப்போது 45–60 நிமிடங்களுக்குள் முடிவடையும் என அமைச்சர் தகவல்..!!

Published: 11 Feb 2026, 5:25 PM |
Updated: 11 Feb 2026, 5:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற கூட்டாட்சி தேசிய கவுன்சிலில் (FNC) நீண்ட பள்ளி பேருந்து பயணங்கள் குறித்த பெற்றோரின் புகார்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு எவ்வளவு நேரம் பயணம் செய்யலாம் மற்றும் பள்ளிக்கு வரலாம் என்பதற்கான தெளிவான வரம்புகளை நிர்ணயிக்க வழிவகுத்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து FNC உறுப்பினர் நாமா அப்துல்லா அல் ஷர்ஹான் கூறுகையில், சில மாணவர்கள் பள்ளி பேருந்துகளில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நீண்ட பயணங்கள் குழந்தைகளின் உடல்நலம், ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமீரகத்தின் கல்வி அமைச்சர் சாரா அல் அமிரி புதிய அதிகபட்ச பயண நேரங்களை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மழலையர் பள்ளி மாணவர்கள் பேருந்தில் 45 நிமிடங்களுக்கு மேல் செலவிடக்கூடாது, அதே நேரத்தில் உயர் வகுப்பு மாணவர்கள் 60 நிமிடங்களுக்கு மேல் பயணிக்கக்கூடாது. மேலும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் எந்த பேருந்து வழித்தடத்தையும் காட்டும் அதிகாரப்பூர்வ பதிவுகள் அமைச்சகத்திடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அமைச்சரின் கூற்றுப்படி, நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தில் 98.5 சதவீத பள்ளி பேருந்து வழித்தடங்கள் அங்கீகரிக்கப்பட்ட நேர வரம்புகளை பூர்த்தி செய்தன. இது ஒரு பெரிய முன்னேற்றம் என்று அவர் விவரித்ததுடன், மேலும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சராசரி பயண நேரம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், போக்குவரத்து விபத்துக்கள் அல்லது மோசமான வானிலை போன்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படலாம் என்று அல் அமிரி விளக்கியுள்ளார். குறிப்பாக மாணவரின் தாமதமான வருகை, பேருந்து வழித்தடங்களின் திட்டமிடலை கணிசமாக சீர்குலைக்கும் என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த அமைப்பை மேம்படுத்த, அமைச்சகம் தொடர்ந்து பேருந்து வழித்தடங்களை மதிப்பாய்வு செய்வதாகவ்ய்ம், தினசரி செயல்பாடுகளை கண்காணிக்கவும் புகார்களைக் கையாளவும் ஒரு சிறப்பு போக்குவரத்து தர யூனிட்டை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

UAE முழுவதும் சேவைகளை மேம்படுத்தவும் மாணவர் நலனைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel