ADVERTISEMENT

அமீரகத்தில் தொடங்கிய ரமலான்.. ஈத் அல் ஃபித்ருக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்..??

Published: 18 Feb 2026, 8:41 PM |
Updated: 18 Feb 2026, 8:41 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் இன்று (பிப்ரவரி 18) முதல் நோன்பு நோற்கத் தொடங்கியதால், நாடு முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் ரமலான் பண்டிகை சூழலை அனுபவிக்க தயாராகிவிட்டனர். மேலும் ரமலான் மாத இறுதியில் நீண்ட ஈத் அல் ஃபித்ர் விடுமுறையையும் பலர் ஏற்கனவே எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, பிறையைப் பார்ப்பதைப் பொறுத்து ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் வரை நீடிக்கும். புனித மாதத்தின் போது நோன்பு, பிரார்த்தனை மற்றும் ஆன்மீக சிந்தனை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டாலும், வரவிருக்கும் நீண்ட பொது விடுமுறை பற்றிய எதிர்பார்ப்பும் குடியிருப்பாளர்களிடம் அதிகரித்துள்ளது.

2026 ஈத் அல் ஃபித்ர் எப்போது?

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது விடுமுறை நாட்காட்டியின்படி, அரபு மாதமான ஷவ்வால் 1 முதல் 3 வரை ஈத் அல் ஃபித்ர் அனுசரிக்கப்படும். ஆங்கில காரண்டரின் படி இந்த விடுமுறையானது மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை (வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் குடியிருப்பாளர்களுக்கு மூன்று நாள் விடுமுறை உறுதியாக கிடைக்கும்.

ADVERTISEMENT

இருப்பினும், மார்ச் 18 ஆம் தேதி நிலவைப் பார்க்கும் குழு பிறை தொடர்பான அறிவிப்பை உறுதி செய்த பின்னரே சரியான விடுமுறை தேதிகள் உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில், மார்ச் 18 ஆம் தேதி ஷவ்வால் பிறை தென்பட்டால், மார்ச் 19 ஆம் தேதி ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தொடங்கும்.

அப்படியானால், குடியிருப்பாளர்கள் மார்ச் 19 முதல் மார்ச் 22 வரை நான்கு நாள் விடுமுறையை அனுபவிக்கலாம். அதுவே மார்ச் 18ம் தேதி பிறை தென்படவில்லை என்றால், ரமலான் மாதம் 30 நாட்களை நிறைவு செய்யும். அதன்படி, மார்ச் 20 அன்று ஈத் அல் ஃபிதர் பண்டிகை கொண்டாடப்படும், இதன் காரணமாக மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை என மூன்று நாள் விடுமுறை கிடைக்கும்.

ADVERTISEMENT

9 நாள் விடுமுறையாக மாற்றுவது எப்படி

மார்ச் 20 ஆம் தேதி ஈத் தொடங்கினாலும், குடியிருப்பாளர்கள் புத்திசாலித்தனமான திட்டமிடலுடன் தங்கள் விடுமுறையை நீட்டிக்க முடியும். ஆம், நீங்கள் திங்கள் முதல் வியாழன் வரை (மார்ச் 16 முதல் 19 வரை) வருடாந்திர விடுப்பு எடுப்பதன் மூலம், வார இறுதி நாட்கள் மற்றும் ஈத் விடுமுறைகள் உட்பட மார்ச் 14 சனிக்கிழமை முதல் மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை வரை ஒன்பது நாள் விடுமுறையை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel