ADVERTISEMENT

துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் புனித மழை.. 11.6°C ஆக குறைந்த வெப்பநிலை!!

Published: 11 Mar 2026, 1:47 PM |
Updated: 11 Mar 2026, 1:47 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை பரவி வருவதால், சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இன்று காலை துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் என்றும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, நாட்டின் கடலோர, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாள் முழுவதும் அவ்வப்போது மேகமூட்டம் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ராஸ் அல் கைமாவின் ஜபெல் ஜெய்ஸ் மலையில் 11.6°C வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றிரவு மற்றும் நாளை அதிகாலை நேரங்களில் சில கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில், வானிலை ஈரப்பதத்துடன் (humid) இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், வடமேற்கு முதல் வடகிழக்கு திசைகளிலிருந்து மணிக்கு 10 முதல் 25 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

கடல் நிலவரம்

ADVERTISEMENT

கடல் பகுதிகளைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடாவில் கடல் நிலைமை மிதமானது முதல் லேசானது வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதேவேளையில், ஓமன் கடலில் கடல் நிலவரம் லேசாகவே இருக்கும் என்றாலும், காலை நேரங்களில் அவ்வப்போது சற்று சீற்றத்துடன் காணப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டுமின்றி, வியாழக்கிழமையன்றும் பகுதி மேகமூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் மழைக்கான வாய்ப்புகள் தொடரக்கூடும் என்றும், நாட்டின் மேற்குப் பகுதிகளில் வெப்பநிலையில் லேசான சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் NCM கூடுதலாகத் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel