அரபு நாடுகளில் மார்ச் 21 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், குடும்பங்களையும் சமூகத்தையும் வடிவமைப்பதில் அன்னையர் ஆற்றும் சக்திவாய்ந்த பங்கை எடுத்துரைத்து, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது வாழ்த்துரையில், “அன்னையர்களே தங்கள் பிள்ளைகளுக்கான முதல் பள்ளி,” என்று கூறியதுடன், வலுவான தேசங்களைக் கட்டியெழுப்ப உதவும் பொறுப்பு, சொந்தம் என்ற உணர்வு, மற்றும் நன்னடத்தை போன்ற நற்பண்புகளை அவர்கள் பிள்ளைகளுக்குள் புகட்டுகிறார்கள் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து அன்னையருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, ஷேக் ஹம்தான் ஒரு அர்த்தமுள்ள முன்னெடுப்பை அறிவித்துள்ளார். அதன்படி, ‘housewife’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘Generation Shaper’ என்ற பட்டத்தை அறிமுகப்படுத்த துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டார். இந்தப் பட்டம் அன்னையரின் தாக்கத்தையும் மதிப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
மேலும், “எங்கள் அன்னையர் அனைவருக்கும்… நன்றி. நீங்கள் தான் அனைத்து நல்லவற்றுக்கும் அடித்தளம். இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.” என்று கூறி அவர் தனது உரையை முடித்தார்.
அதுமட்டுமில்லாமல், குடும்பங்களையும் சமூகங்களையும் கட்டமைப்பதில் தாய்மார்களின் அன்பு, வலிமை மற்றும் நீடித்த செல்வாக்கைக் கொண்டாடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவையும் துபாய் இளவரசர் பகிர்ந்துகொண்டார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel