ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா மோதல் காரணமாக வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், திங்களன்று ஈரான் நடத்திய தாக்குதலில் மட்டும் அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்து, அவற்றில் 12 ஐ இடைமறித்து அழித்ததாகவும், மூன்று ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைப்புகள் 18 ட்ரோன்களைக் கண்டறிந்தன, அவற்றில் 17 இடைமறிக்கப்பட்டன, அதே நேரத்தில் ஒரு ட்ரோன் அமீரகத்துக்குள் தரையிறங்கியது என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள்
ஈரானிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, அதிகாரிகள் 253 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்துள்ளனர், அவற்றில் 233 வெற்றிகரமாக அழிக்கப்பட்டன, 18 கடலில் விழுந்தன, மற்றும் இரண்டு அமீரகத்துக்குள் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், வான் பாதுகாப்பு அமைப்புகள் 1,440 ட்ரோன்களில் 1,359 ஐ இடைமறித்துள்ளன, அதே நேரத்தில் 81 ட்ரோன்கள் நாட்டிற்குள் தரையிறங்கியதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக, எட்டு க்ரூஸ் ஏவுகணைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்காளதேச நாட்டினர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், எமிராட்டி, எகிப்து, சூடான், எத்தியோப்பியன், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரானிய, இந்திய மற்றும் வங்காளதேச போன்ற பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் உட்பட மொத்தம் 117 பேர் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க தீர்க்கமாக பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel