ஐக்கிய அரபு அமீரகம் இன்று (மார்ச் 7, சனிக்கிழமை) மீண்டும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், இந்த தாக்குதலின் போது நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வெற்றிகரமாக இடைமறித்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டன, 15 வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன, அதே நேரத்தில் ஒரு ஏவுகணை சேதத்தை ஏற்படுத்தாமல் கடலில் விழுந்தது என கூறப்படுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகளும் 121 ட்ரோன்களைக் கண்டறிந்தன, அவற்றில் 119 அவற்றின் இலக்குகளை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டன, அதே நேரத்தில் இரண்டு ட்ரோன்கள் அமீரக எல்லைக்குள் விழுந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்வழி தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, 1,305 ட்ரோன்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அவற்றில் 1,229 இடைமறிக்கப்பட்டு 76 நாட்டின் எல்லைக்குள் விழுந்துள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் எட்டு க்ரூஸ் ஏவுகணைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஏவுகணை தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்காளதேச நாட்டினர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, 112 பேர் சிறிய காயங்களுக்கு ஆளானார்கள், இதில் எமிராட்டி, எகிப்து, எத்தியோப்பியன், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரானிய, இந்திய, வங்காளதேசம், இலங்கை, அஜர்பைஜான், யேமன், உகாண்டா, எரிட்ரியன், லெபனான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொமோரியன் மற்றும் துருக்கி போன்ற பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் அடங்குவர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஆயுதப்படைகள் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முழுமையாக தயாராக இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தீர்க்கமாக பதிலளிக்க ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் தேசிய நலன்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel