அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் சமீபத்திய டிராவில் இந்தியர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஷாமன் ஷாஜி என்பவர், கடந்த மார்ச் 22 அன்று 229425 என்ற வெற்றி டிக்கெட்டை வாங்கியதாகவும், அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அவர் நேரலை டிராவைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தத் தருணம் குறித்துப் பேசிய அவர், தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இந்த அனுபவம் மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும் கூறி, ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
32 வயதான இந்தத் தொழிலதிபர் கடந்த மூன்று மாதங்களாக இந்த டிராவில் பங்கேற்று வரும் நிலையில், இந்த வெற்றி தனக்கு முற்றிலும் எதிர்பாராத ஆச்சரியமாக வந்ததாகக் கூறினார். தற்போது தனது குடும்பத்துடன் கேரளாவில் இருக்கும் அவர், தானும் தனது மனைவியும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனதாகவும், முதலில் இந்தச் செய்தியை நம்ப முடியவில்லை என்றும் பகிர்ந்து கொண்டார். மேலும், எதிர்காலக் டிராக்களில் மீண்டும் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் ஷாஜி கூறியுள்ளார்.
இதே போல், ட்ரீம் கார் சீரிஸ் 16-ல், ஷார்ஜாவைச் சேர்ந்த வெளிநாட்டவரான அகமது முகமது, புத்தம் புதிய மசெராட்டி கிரேகேல் காரை வென்றுள்ளார். 2005 முதல் ஷார்ஜாவில் வசித்து வரும் 40 வயதான இவர், 30-க்கும் மேற்பட்ட சக ஊழியர்களுடன் இந்த டிராவில் தவறாமல் பங்கேற்று வரும் நிலையில், இது தங்களின் முதல் வெற்றி என்றும், இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது ஒரு அர்த்தமுள்ள தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர்ந்து பங்கேற்க தங்களை ஊக்குவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே டிராவில் மேலும் பல வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். ஐந்து பங்கேற்பாளர்கள் தலா 200 கிராம், 24 காரட் தங்கக் கட்டிகளைப் பெற்றனர். இவர்களில் அபுதாபியைச் சேர்ந்த முகமது ஷகீல் அகமது அலி மற்றும் கார்த்திக்குமார் காளியபெருமாய், ஷார்ஜாவைச் சேர்ந்த ராஜ்கோபால் சந்திரன், சவுதி அரேபியாவைச் சேர்ந்த முகமது மக்தூம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சாலமன் ராஜா ஆகியோர் அடங்குவர்.
அதுமட்டுமில்லாமல், பிக் வின் போட்டியில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மஹ்மூத் ஸௌரோப் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கணேஷ் வெங்கடசுப்ரமணியம் ஆகியோர் தலா 150,000 திர்ஹாம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த சுஹேல் மியா ஓலி மியா 140,000 திர்ஹம் ரொக்கப்பரிசும், அதே சமயம் சிரியாவைச் சேர்ந்த முகமது அல்முஸ்தாஃப் 120,000 திர்ஹம் ரொக்கப்பரிசும் வெல்லும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மே 3 அன்று நடைபெறவுள்ள நேரடி டிராவில், 25 மில்லியன் திர்ஹாம் மதிப்பிலான கிராண்ட் பரிசு வழங்கப்படவுள்ளதாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel