ADVERTISEMENT

கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா..!!! பிரதமர் அலுவலகம் தகவல்…!!!

Published: 13 Mar 2020, 8:36 AM |
Updated: 14 Mar 2020, 4:34 AM |
Posted By: jesmi

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ட்ரூடோவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக நேற்று வியாழக்கிழமை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  மருத்துவர்களின் அறிவுரைப்படி இரண்டு வாரங்கள் அவர் தனிமையில் வைத்து கண்காணிக்கப்படுவார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கனடப் பிரதமரின் மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூடோ சமீபத்தில் லண்டன் சென்று வந்துள்ளார். வந்த சில தினங்களில் அவருக்கு காய்ச்சலுக்குண்டான அறிகுறிகள் தென்பட்டன. இந்நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் சோஃபிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே,
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை அவர் கனடாவில் நடந்த ஒரு பொது நிகழ்விற்குப் பிறகு அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கனட பிரதமரின் மனைவி சோஃபி கிரேகோயருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவருக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், எந்த அறிகுறிகளும் இல்லாமல் பிரதமர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கனடாவில் இதுவரை சுமார் 150 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒருவர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.