ADVERTISEMENT

அமீரகவாசிகள் பீதி அடைய வேண்டாம்..!! LULU மற்றும் CARREFOUR-ன் அனைத்து கிளைகளும் வழக்கம்போல் திறந்திருக்கும்..!!!

Published: 23 Mar 2020, 7:13 PM |
Updated: 23 Mar 2020, 7:15 PM |
Posted By: jesmi

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து அதன் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாப்பிங் மால் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இன்ன பிற பொதுவான இடங்கள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அமீரக அரசு செய்தி வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் சற்று முன்பு வந்த தகவலின்படி இந்த இரண்டு வாரங்களில் மக்களின் பயன்பாட்டிற்கும் வாழ்வாதாரத்திற்கும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய மெடிக்கல் ஷாப், சூப்பர் மார்க்கெட், மீன், இறைச்சி மற்றும் காய்கறி விற்பனை நிலையங்கள் அனைத்தும் எந்த தடங்கலும் இன்றி வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அமீரகத்தில் பலசரக்கு விற்பனையில் அதிக பங்களிப்பை அளித்து வரும் LULU மற்றும் CARREFOUR ஆகிய நிறுவனங்களின் அனைத்து சூப்பர்மார்கெட்களும் வழக்கம்போல் செயல்படும் என்றும், சமீபத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டபடி காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என்றும் அதன் நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஷாப்பிங் மால் அடைக்கப்பட்டிருந்தாலும் ஷாப்பிங் மாலில் இருக்கும் இவை இரண்டும் வடிக்கையாளர்களுக்காக வழக்கம்போல் திறக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினர்.

ADVERTISEMENT

LULU குழுமத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “நாங்கள் இந்நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த வித தட்டுப்பாடும் இல்லாத வண்ணம் பல்வேறு வகையானா சப்ளையர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றிவருகிறோம். மேலும் LULU ஹைபெர்மார்கெட் மற்றும் குடோன்களில் தேவைக்கு அதிகமான அளவு அனைத்து விதமான அத்தியாவசியமான பொருட்களும் இருப்பில் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் எந்த வித பதட்டமும் பீதியும் அடைய வேண்டாம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதே போன்று CARREFOUR குழுமத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலும், எங்களின் அனைத்து சூப்பர்மார்கெட்டிலும் தேவைக்கு அதிகமான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளதாகவும், எங்களின் அனைத்து கிளைகளும் வழக்கம் போல் காலை முதல் இரவு வரை வரும் இரண்டு வாரங்களிலும் எந்த தடையும் இன்றி திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் அனைவரையும் பொறுப்புடனும், மற்ற வடிக்கையாளர்களையும் கவனத்தில் கொண்டு ஷாப்பிங் செய்யுமாறு ஊக்குவிக்கின்றோம். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பொருட்களும் இருப்பில் உள்ளன. மேலும் தேவையை கருத்தில் கொண்டு அதனை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக அனைத்து கிளைகளின் இருப்புகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காக சப்ளையர்களுடன் மிகநெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் பில்களில் விலை அதிகரிப்பை அனுபவிக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்துள்ளனர்.

ஷாப்பிங் மால் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்ற இந்த நடவடிக்கையானது COVID-19 எனப்படும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.