ADVERTISEMENT

துபாயில் நடைபெறும் சுத்திகரிப்புப் பணியின்போது விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்கள் ரேடாரால் கண்காணிப்பு..!!!!

Published: 28 Mar 2020, 4:44 AM |
Updated: 28 Mar 2020, 5:28 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்று நாள் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் போது, அதிகாரிகள் பொதுமக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தும் “Stay Home” என்பதை கடைபிடிக்காமல் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க துபாய் காவல்துறை ரேடர்களை செயல்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

துபாய் சாலைகளில் உள்ள ரேடார்கள் சுத்திகரிப்பு நடவடிக்கையின் போது (இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை, மார்ச் 29 வரை) தங்கள் வாகனத்தில் நகரத்தை சுற்றி வரும் ஓட்டுனர்களை கண்காணித்து தகவல் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுமக்கள் இத்திட்டம் நடைபெறும் சமயங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் ஆன்லைனில் அனுமதி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு வீட்டை விட்டு வெளியேறும் நபர்கள் அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியேற வேண்டும் என்றும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை குழு www.move.gov.ae என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் துபாயில் உள்ளவர்கள் உணவு அல்லது மருந்துகளை வாங்குவது போன்ற அத்தியாவசிய நோக்கங்களுக்காக தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் போது வீட்டை விட்டு வெளியேற அனுமதி கோரலாம்.

இதேபோல், அபுதாபியில் சுத்திகரிப்பு பணியின் போது அவசியத் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர விரும்பும் நபர்கள் அபுதாபி காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இணையதளத்தில், பதிவு செய்து அனுமதி பெற்று வெளியே வரலாம் என அபுதாபி போலீஸ் தெரிவித்துள்ளது.