ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு துபாயில் தனக்கு சொந்தமான முழுகட்டிடத்தையும் நன்கொடை அளித்த இந்திய தொழிலதிபர்..!!!

Published: 29 Mar 2020, 12:27 PM |
Updated: 29 Mar 2020, 12:33 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாயைச் சேர்ந்த ஃபின்ஜா ஜூவல்லரியின் (Finja Jewellery) நிறுவனரும் அதன் தலைவருமான அஜய் சோப்ராஜ், துபாயில் உள்ள ஜூமைரா லேக் டவர்ஸில் (JLT) உள்ள தனக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை கொரோனா வைரஸிற்கான தனிமைப்படுத்தப்பட்ட மையமாகப் பயன்படுத்திக் கொள்ள நன்கொடை அளித்துள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் வணிக சமூகம், சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு  தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. நாட்டின் தனியார் மற்றும் பொதுத்துறை அளிக்கும் ஆதரவானது, உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு உதவுவதில் தொழிலதிபர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அமீரக மற்றும் வெளிநாட்டு வணிகத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும், நோயாளிகளுக்கு இடமளிக்க போதுமான இடவசதிகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து ஆதரவு அளித்த வண்ணமே இருக்கின்றனர்.

இந்நிலையில், துபாய் நகரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஆதரவளிக்கும் விதமாக 25 ஆண்டுகளாக துபாயை தனது சொந்த வீடாகக் கருதும் இந்திய தொழிலதிபர், ஜூமைரா லேக் டவர்ஸில் ஒரு முழுமையான கட்டிடத்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக, COVID-19க்கு எதிரான நாட்டின் ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் இதனை பயன்படுத்திக் கொள்ள நன்கொடையாக அளித்துள்ளார். இந்த கட்டிடமானது 77,000 சதுர அடி பரப்பளவில் 400 பேர் வரை தங்கக்கூடிய இடமாகும்.

ADVERTISEMENT

இதனைப் பற்றி இந்திய தொழிலதிபர் அஜய் சோப்ராஜ் கூறியதாவது, “இதுபோன்ற சவாலான காலங்களில், இந்த தொற்றுநோயை சமாளிக்க சமூகம் ஒன்றிணைந்து நாம் வசிக்கும் நாட்டை ஆதரிப்பது அவசியம் என்று நான் நம்புகிறேன். இந்த முக்கியமான காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு எனது உதவிகளை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக எனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் நகரத்தை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT