ADVERTISEMENT

UAE : குடியிருப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை இலவசமாக வழங்கிய காவல்துறை..!!!

Published: 11 Apr 2020, 5:32 AM |
Updated: 11 Apr 2020, 5:34 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற்று வரும் “உங்கள் பாதுகாப்பிற்காக” (For Your Safety) என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முசாஃபா (Mussafah), அல் மஃப்ரக் (Al Mafraq) மற்றும் அல் ஷவாமிக் (Al Shawamekh) உட்பட அபுதாபியில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முக கவசம் (face mask) மற்றும் தனி நபர் பாதுகாப்பு பொருட்களை (personal protection equipment) அபுதாபி காவல்துறை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

காவல்துறை ரோந்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு சமூகத் தொலைதூர நெறிமுறைகள் (social distancing protocols), அடிக்கடி கை கழுவுதல் மற்றும் பொதுமக்கள் ஒன்றாகக் கூடும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்ட, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளால் கூறப்பட்டுள்ள கொரோனா வைரசிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதே போல், அபுதாபி காவல்துறை அல் அய்ன் (Al Ain) நகரத்தின் தொழில்துறை பகுதிகளிலும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறையின் கேப்டன் முஹம்மது முசாபா அல் சாதி (Captain Mohamed Musabah Al Saadi, Abudhabi Police) கூறியதாவது, “இந்த பிரச்சாரம் தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் பணியிடங்கள் மற்றும் தங்குமிட முகாம்களில் முக கவசங்களை விநியோகிப்பதும், முக கவசங்கள் மற்றும் கையுறைகளை முறையாக அணிவது மற்றும் சமூக தொலைதூர நெறிமுறைகளை பின்பற்றுவது உட்பட கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் அபுதாபி மற்றும் அல் அய்ன் நகரத்தில் வசிக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான கட்டிட பணி வேலை செய்யும் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT