ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் மறு அறிவுப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.!!! சவூதி மன்னர் ஒப்புதல்..!!!

Published: 12 Apr 2020, 8:44 AM |
Updated: 12 Apr 2020, 8:49 AM |
Posted By: jesmi

சவூதி அரேபியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை மறு அறிவிப்பு வெளியிடும் வரை நீட்டிக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான SPA ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12, 2020) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடந்த மாதம் மார்ச் 23, மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை சவூதி மன்னர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். மேலும், கடந்த வாரம் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத், ஜித்தா போன்ற சில முக்கிய நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணமே இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் சனிக்கிழமை நிலவரப்படி (ஏப்ரல் 11, 2020) சவூதி அரேபியாவில் மொத்தம் 4,033 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 52 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், 720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலும் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.