ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் முதலாவதாக “ஸ்மார்ட் ஹெல்மெட்” பயன்படுத்தும் துபாய் போலீஸ்..!!! கொரோனா பரவலை தடுக்க புதிய முயற்சி..!!!

Published: 14 Apr 2020, 11:27 AM |
Updated: 14 Apr 2020, 11:27 AM |
Posted By: jesmi

உலகளவில் முன்னோடியாக பல புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வரும் துபாய் காவல்துறை, தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கண்டறியும் புது வகையிலான ஸ்மார்ட் ஹெல்மட்டை (smart helmet) அறிமுகப்படுத்தியுள்ளது. துபாயின் போக்குவரத்து துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் இன்ஃப்ராரெட் கேமரா (Infra-red Camera) மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence,AI) போன்ற அம்சங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் உள்ள இன்ஃப்ரா ரெட் கேமரா (Infra-red Camera) மூலம் உடலின் வெப்பநிலையை கணக்கிட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களா என்பதை கண்டறிய முடியும். மேலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) முறையின் மூலம் வாகன ஓட்டிகளின் முகத்தினை ஸ்கேன் (face recognition) செய்து அவர்கள் பற்றிய முழுவிபரத்தை அறிய முடியும். இதேபோன்று வாகனங்களின் பதிவு எண்ணையும் (plate number) ஸ்கேன் செய்து அந்த வாகனங்களின் முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த முயற்சியானது, போக்குவரத்து பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கும் அதன் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் உலகளாவிய நடைமுறைகளையும் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக துபாய் போலீஸின் போக்குவரத்து பாதுகாப்பு துறையின் இயக்குனர் (Director of Transportation Security Department, Dubai Police) பிரிகேடியர் ஜெனரல் ஒபைத் அல் ஹத்பூர் (Brigadier General Obaid Al Hathboor) தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த அதி நவீன தொழில்நுட்பத்தை வளைகுடா நாடுகளிலேயே முதன்முதலில் பயன்படுத்தும் நாடு ஐக்கிய அரபு அமீரகமே என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT